வீட்டு டைல்ஸ் அழுக்கா இருக்கா.. புதிது போல மாற்ற இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!

டைல்ஸ் கறை
டைல்ஸ் கறை

வீன காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் டைல்ஸ் கல் தான் பதிக்கப்படுகிறது. சிமெண்ட் தரை காலம் எல்லாம் மலையேறியது. டைல்ஸ் கற்களில் உள்ள வகைகளையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். மார்பில், கிரைனட் என அடுத்தடுத்து அப்டேட் ஆகி கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் பலரது வீட்டில் டைல்ஸ் வெள்ளை, க்ரே கலரில் தான் இருக்கும். இதனால் அழுக்கு படிந்தாலோ, துரு பிடித்தாலோ சுலபமாக நீக்க முடியாது. இதனால் அந்த இடமே அசிங்கமாகிவிடும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதில் போக்குவது எப்படி என பார்க்கலாம்.

கரை எவ்வளவு இருக்கோ அதை கணக்கில் கொண்டு கல் உப்பை எடுத்து கொள்ள வேண்டும். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் 1 முழு எலுமிச்சை பழ சாறு, சோப்பு பவுடர் 1 ஸ்பூன், சோடா உப்பு அரை ஸ்பூன் சேர்த்து கலக்கவும். இறுதியில் அதனுடன் வினிகர் ஒரு ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் போல கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.

இதை வாட்டர் கேனில் ஊற்றி, மூடியில் பல ஓட்டைகள் போட்டு அழுக்குள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். சிறுது நேரம் அதை ஊற வைத்த பிறகு ஸ்கிரப்பால் துடைத்தால் அனைத்து கரையும் நீங்கி பளிச்சென்று ஆகிவிடும். செலவில்லாமல் எளிதில் வீட்டு கறையை சுத்தம் செய்ய இதுவே வழியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com