ஈஸியாக வாஷிங் மிஷினை புதிது போல மாற்ற சில டிப்ஸ்!

வாஷிங் மிஷின்
வாஷிங் மிஷின்Intel

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வாஷிங் மிஷின் மிக மிக முக்கியமானது. துணியில் இருக்கும் அழுக்கை போக்கும் இந்த பொருளில் அழுக்கு சேர்வது என்பது பொதுவான ஒன்று. இதை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். இந்த பதிவில் வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை வைத்து எப்படி வாஷிங் மிஷினை சுத்தம் செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1.சமையல் சோடா

2.வினிகர்

என்ன செய்ய வேண்டும்?

சமையல் சோடா மற்றும் வினிகரை நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இப்போது பேஸ்டை வாஷிங் மெஷினில் அனைத்து இடங்களிலும் தடவி 15 நிமிடம் அப்படியே ஊற விடவும். பின்பு ஸ்க்ரப்பரை பயன்படுத்தி அனைத்து இடங்களையும் நன்கு தேய்க்கவும். அதன் பிறகு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நனைத்து வாஷிங் மெஷினை துடைத்து விடவும். அப்புறம் பாருங்கள் வாஷிங் மிஷின் புதிது போல மாறிவிடும்.

மற்றொரு டிப்ஸ்:

முதலில் 1-2 லிட்டர் தண்ணீரை சூடுப்படுத்தி வெதுவெதுப்பாக எடுத்து கொள்ளவும். இப்போது அதில் 2-3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன் பின்பு இந்த கலவையை நன்கு ஆற வைக்கவும். இப்போது இந்த நீரில் காட்டன் துணியை போட்டு நனைத்து எடுக்கவும். அதை வைத்து அழுக்கு படிந்த வாஷிங் மிஷினை துரைத்து எடுக்கவும்.

குறிப்பு: புதியதாக மிஷின் வாங்கி இருப்பவர்கள் அல்லது ஏற்கெனவே மிஷினில் பிரச்சனை இருந்தால் இந்த குறிப்புகளை பின்பற்றுவதற்கு முன்பு சர்வீஸ் டீமிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com