
நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் சரி அல்லது தனிமை உணரும்போதும் சரி சுற்றி உள்ள அழகான விஷயங்கள் நம்மை முழுவதுமாக மாற்றும் தன்மையுடையது. ஒருவருடைய குணம் மற்றும் பழக்க வழக்கங்கள் அவர் எப்படி வீட்டை வைத்திருக்கிறார் என்பதிலையே தெரிந்துவிடுமாம்.
சிலர் அதிகமான நேரத்தையும் பணத்தையும் வீட்டை அழகாக வைத்துக்கொள்ளவே செலவிடுங்கின்றனர். அதில் ஒருவகையான திருப்தியையும் அடைங்கின்றனர். ஒரு சிலர் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்கள் கவனத்தை ஈர்க்கவே வீட்டை அழகாக பராமரிக்கிறார்கள்.
அப்படி உங்களுக்கும் உங்கள் வீட்டை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளதா? அதற்கு முதல் படி வீட்டு சுவரை அழகுப்படுத்துவதுதான். இந்த தொகுப்பில் வீட்டின் சுவரை கூலாக வைத்துக்கொள்ள உதவும் ஐந்து வழிகளை பார்ப்போம்.
Ombre Wall Painting:
இது சுவரில் வாட்டர் கலர் மற்றும் டெக்ஷர் அடிப்படையில் வண்ணம் தீட்டுவது. அதாவது பெயிண்ட்டில் அதிகமான தண்ணீர் சேர்த்து முதல் பாதி சுவர் வரை தீட்ட வேண்டும். மீதமுள்ள சுவரில் அதே டோனில் சற்று டார்க்கான கலரில் தீட்ட வேண்டும். இரு வண்ணமும் காய்வதற்கு முன்னர் அதன் இடையில் வெறும் பிரஷை தண்ணீரில் நனைத்து தீட்டி இரு வண்ணங்களையும் ஒன்றினைக்க வேண்டும். நீங்கள் தூங்கி எழுந்தவுடன் இந்த சுவரை பார்த்தீர்கள் என்றால் அது ஒரு இலகுவான மனநிலையை உணர வைக்கும்.
சுவரும் தத்துவமும்:
லைட் கலர்ஸ், நல்ல வார்ம் கலர்ஸ் மற்றும் வெள்ளை நிறங்களில் எதாவது ஒரு கலரை தேர்ந்தெடுத்துக்கொண்டு சுவரில் தீட்ட வேண்டும். அதன்மேல் வண்ணமையான எழுத்துகளில் தத்துவங்கள், தன்னம்பிக்கை வரிகள், பிடித்த இலக்கிய வரிகள் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இது உங்கள் விருந்தாளிகளையும் ஈர்க்கும் மற்றும் உங்கள் மன உறுதியையும் வளர்க்கும்.
பெட்ரூம் Vs லிவ்விங் ரூம்
பொதுவாக பெட்ரூமில் ஒரே வடிவத்தை திரும்ப திரும்ப பயன்படுத்தி பேட்டர்ன்ஸாக சுவரில் ஸ்டென்ஸில் (டிஸைன் நகல்) செய்யலாம். அந்த வடிவங்களில் இருவேறு லைட் வண்ணங்கள் பயன்படுத்துவது உங்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும்.
இந்த மாடலில் பெட் ரூமிற்கு இரு லைட் கலர்ஸ் பயன்படுத்தலாம். அதேபோல் லிவ்விங் ரூமிற்கு ப்ரைட் கலர்ஸ் பயன்படுத்துவது மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்.
சுவரின் அழகு இந்த ஒரே கலரில்?
ஒரு வேடிக்கையான கலரை அறையில் பயன்படுத்தினால் அது உங்கள் மனநிலையை நன்றாக வைத்துக்கொள்ளும். ஆம்! வேடிக்கைக்கான கலர் என்றாலே அது ஆரஞ்சு கலர்தான். மிதமான ஆரஞ்சு கலரை அறை முழுவதும் பயன்படுத்துவதால் அது எபோதும் உங்களை எனர்ஜிட்டிக்காக வைத்துக்கொள்ளும்.
அல்லது ஒரு பேட்டர்ன் வடிவில் வெவ்வேறு ஆரஞ்சு டோன் பயன்படுத்தலாம்.
வாட்டர் கலர் சுவர்:
மிக எளிதான, அழகான முறை என்றால் அது வாட்டர் கலர் பெயிண்டிங்தான். இரண்டு அல்லது மூன்று பொருத்தமான வண்ணங்களை தேர்ந்தெடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சுவரில் தீட்டினால் அது குறைந்த நேரத்திலேயே அழகான கண்கவர் சுவராக மாறிவிடும். இதற்கு Dilute Acrylic paints பயன்படுத்துவது சிறந்தது.