பொய் சொல்பவர்களை மூன்று வழிகளில் எப்படி கண்டுபிடிப்பது?

How to find liar Pearson in three steps
How to find liar Pearson in three steps

பொதுவாக குழந்தைகள் சொல்லும் பொய்யை பெற்றோர் கண்டுப்பிடித்துவிடுவார்கள். அதேபோல், நெருக்கமான நண்பர்கள் பொய் சொன்னாலும் கண்டுப்பிடித்துவிடலாம். ஆனால் சில நேரங்களில் பொய் கூறுவதற்கு ஒரு அறிகுறிகூட இல்லாமல் சிலர் பொய் சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கே தெரியாமல் எதாவது ஒருவழியில் மாட்டிக்கொள்வார்கள். அதேபோல் நாமும் அவர்களை கூர்ந்து கவனித்து அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எப்படிப் பொய் கூறுபவர்களை கண்டுபிடிப்பது என்பதைப் பார்ப்போம்.

பேசுவதைக் கவனியுங்கள்:

ஒருவர் பேசும்போது உண்மை பேசுகிறாரா? பொய் பேசுகிறாரா? என்பதை அவர்கள் பேசும் தோரணையிலிருந்தே கண்டுப்பிடித்துவிடலாம். உதாரணத்திற்குப் பொய் பேசும்போது வராத இருமலை அடுத்து என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்காக அடிக்கடி செயற்கையாக வரவைத்துக்கொண்டு பேசுவார்கள்.

திடீரென்று சம்மதம் இல்லாத விஷயத்தையோ இல்லை ஒரு சாதாரண விஷயத்தையோ தன்னையறியாமல் சத்தம் போட்டு சொல்வர்கள். மிக வேக வேகமாகக் உரையாடலை முடிக்கப்பார்ப்பார்கள். ஏனெனில் பொய் சொல்பவர்கள் எப்போது அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்கலாம் என்றே வழி தேடிக்கொண்டிருப்பார்கள்.

முகபாவங்களைக் கவனியுங்கள்:

’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். ஆம்! ஒருவர் பேசும்போது அவர் முகபாவங்களும் சேர்ந்து பேசுமாம். வார்த்தைகளை விட முகபாவம் உண்மையை மட்டுமே பேசும் தன்மையுடையது. ஒருவர் பேசும்போது இயல்பைவிட அதிகமாகத் தலையை ஆட்டி ஆட்டி பேசுகிறார் என்றால் அவர் நிச்சயம் எதையோ மறைக்கிறார் என்று உறுதி செய்துவிடலாம்.

பொதுவாகப் பொய் சொல்லும்போது மூளை பேச்சிற்கு மட்டுமே ஒத்துழைக்குமே தவிர முகபாவத்திற்குச் சிறிதும் ஒத்துப்போகாது. அதனால் முகபாவத்தை உண்மை பேசுவது போல் வைத்துக்கொள்ளத் தூண்டும். ஆனால் அதுவே அப்பட்டமாகக் காண்பித்துக் கொடுத்துவிடும் இவர் நடிக்க முயற்சிக்கிறார் என்று.

images.newscientist.com

எப்போதும் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை பார்த்துத்தான் பேச வேண்டும். ஒருவர் உங்கள் கண்களைப் பார்க்க முயன்றும் பேசும்போது சரியாகப் பார்க்க முடியவில்லை என்றால் அவர் ஏதோ உண்மையை மறைக்கிறார் என்று கண்டுப்பிடித்துவிடலாம்.

உடல் தோரணையைக் கவனியுங்கள்:

ஒருவர் வழக்கத்திற்கு மாறாகப் பேசும்போது பேச்சுக்கு இடையிடையே கழுத்தைப் பின்பக்கம் பிடிப்பது, கைகளை இடையிடையே தேய்ப்பது, வாயை மூடிக்கொள்வது, மூக்கின் மேல் விரல் வைப்பது போன்ற தேவையற்ற ஜாடைகள் செய்வார்கள். அப்போது எளிதாக நீங்கள் கண்டுப்பிடித்துவிடலாம் அவர்கள் எதோ பொய் சொல்கிறார்கள் என்று.

thewrightinitiative.com

உங்களிடம் யாராவது பொய் சொல்கிறார் என்றால் இந்த மூன்று முறைகள் வைத்து நீங்கள் கண்டுப்பிடித்துவிடலாம். அப்படி ஒருவர் பொய் சொல்கிறார் என்றால் நீங்களாகவே அவர் பேசுவதற்கு ஒரு வசதியை ஏற்படுத்திக்கொடுங்கள். உதாரணத்திற்கு, “ பரவாயில்லை எதையும் மறைக்க வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள். எதுவாயினும் நான் எதுவும் சொல்ல மாட்டேன் ” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இது உங்களிடம் பேசுபவர்களைப் பொய் கூறாமல் தடுப்பதற்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com