கைவிரல்களை வைத்து ஆளுமைத் தன்மையை கண்டறியும் விதம்!

How to Find Personality by Fingering
How to Find Personality by Fingeringhttps://www.jagranjosh.com

மது கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு நீளத்தில் இருக்கும். ஒரு மனிதரின் கை விரல்களை வைத்து அவரது ஆளுமைத் தன்மையை தெரிந்து கொள்ளலாம் என்று உளவியல் சொல்கிறது. அது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஆட்காட்டி விரல் மோதிர விரலை விட நீளமாக இருந்தால்: சிலருக்கு அவர்களுடைய மோதிர விரலை விட ஆட்காட்டி விரல் நீளமாக இருக்கும். அப்படிப்பட்ட நபர்கள் எந்த சூழ்நிலையிலும் விரைவாக பொறுப்பேற்கக்கூடிய தலைமை பண்புடன் இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். பிறரை வழி நடத்துவதில் சிறந்து விளங்குவார். சமயோசிதமாக நடந்து கொள்வதும் பிறருக்கு சரியான அறிவுரை வழங்குவதும் இவருக்கு கைவந்த கலை.

உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். எதையும் ஆராய்ந்து பார்த்து தொலைநோக்குடன்தான் செயல்படுவார்கள். சரியான முடிவுகளை எடுப்பார்கள். சமமான மனநிலை கொண்டவர்கள். பிறரை அதேபோல நடத்துவார்கள். தான் பிறரால் தொடரப்படுவதால் தன்னுடைய செய்கைகளில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பார்கள். ஒரு நல்ல தலைவனாக இருக்கக்கூடிய அனைத்து பண்புகளும் இவர்களுக்கு இருக்கும்.

2. ஆள்காட்டி விரலும் மோதிர விரலும் ஒரே நீளமாக இருந்தால்: இவர்கள் எப்போதும் சீரான முறையில் வாழ்க்கையை நடத்துவார்கள். தனது அன்பிற்குரியவர்கள் மீது அக்கறையும், உண்மையான அன்பையும், மென்மையான உணர்வுகளையும் காட்டக்கூடியவர்கள். ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். பிறருடைய பிரச்னைகளை பொறுமையாகக் காது கொடுத்து கேட்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வதிலும் மகிழ்வார்கள்.

இவரை கணவராகவோ அல்லது மனைவியாகவோ நண்பராகவோ அல்லது உறவினராகவோ அடையப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று நினைக்கும் அளவிற்கு அவர்களை மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வைத்து கொள்வார்கள். எளிதாக பிறரின் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்று விடுவார்கள். அமைதியான ஆற்றலை செலவழிப்பார்கள். இவர்களை மக்கள் பெரிதாக நம்புவதாலும் ஈர்க்கப்படுவதாலும் தங்களுடைய ஆழ்ந்த இரகசியங்களை இவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

3. மோதிர விரல் ஆள்காட்டி விரலை விட நீளமாக இருந்தால்: அதீத நம்பிக்கை உள்ள ஆசாமிகள் இவர்கள். மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள். பகுத்தறிவு உணர்வும் நேர்மறை அணுகுமுறையும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அதிக ஸ்ட்ரெஸ்ஸால் முடி உதிர்கிறதா? இந்த ஐந்து விஷயம் உங்களுக்குத்தான்!
How to Find Personality by Fingering

வாழ்க்கையில் தோல்வியுற்றால் அதற்காக மனம் கலங்காமல் மீண்டும் மீண்டும் முயற்சிப்பார்கள். முயற்சியில் வரும் தடங்கல், தடைகளை விரைவாக தடுப்பதில் வல்லவர்கள். எதிர்பாலினத்தவரால் மிக எளிதாக ஈர்க்கப்படுவார். இரக்க குணம் கொண்டவர்கள். பிறருடன் இணக்கமாக நடந்து கொள்வார்கள்.

4. கட்டை விரல் நன்றாக வளையும் தன்மையுடன் இருந்தால்: சிலரால் தங்கள் கட்டைவிரலை பின்னோக்கி நன்றாக வளைக்க முடியும். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் பிறரை அனுசரித்துச் செல்வார்கள். ஆனால், சட்டென்று கோபம் வந்துவிடும். தனக்கு சரி என்று தோன்றியதை தவறாமல், தயங்காமல் செய்யக்கூடிய குணம் உடையவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com