லட்சுமி கடாட்சம் பெருக வீட்டில் செய்ய வேண்டியவை!

vastu tips tamil
vastu tips tamil
Updated on

வீட்டில் நிலவும் நேர்மறை ஆற்றல் மனதில் புத்துணர்ச்சியை அதிகரிக்கும். அதனால் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

வீட்டின் வாசலுக்கு முன்பு தினமும் தண்ணீர் தெளித்து கோலமிட்டு, மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வைப்பது நேர்மறை சக்திகளை எளிதாக வீட்டுக்குள் வரவழைக்கும்.

வீட்டுக்கு உபயோகம் இல்லாத தேவைக்கு அதிகமாக இடத்தை ஆக்கிரமிக்கும் பொருட்கள், உடைந்த பொருட்கள், கிழிந்த துணிகள், இயங்காத மின்சார சாதனங்கள் ஆகியவற்றை வீட்டில் இருந்து அப்புறப் படுத்துங்கள்.

தரையை வாரம் ஒருமுறை தண்ணீரில் கல் உப்பு கரைத்து மாப் கொண்டு வீடு முழுவதும் துடைத்து எடுத்தால்  எதிர்மறை சக்தி மறைந்து நேர்மறை  ஆற்றல் கிடைக்கும்.

வீட்டின் வெளியே தொட்டிகளில் பசுமையான செடிகளை வளர்ப்பது, வண்ண மீன்கள் வளர்ப்பது ஆகியவை நேர்மறை ஆற்றலை கொடுக்கும்.

தினமும் காலையில் வீட்டில் ஜன்னகளைத் திறந்து வைத்து இயற்கை காற்று உள்ளே வருமாறு செய்து வீட்டில் நறுமணம் தரும் ஊதுபத்தி, தூபம், காட்டினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும்.

ஆன்மீக ரீதியாக நம் வீட்டின் நிலை வாசலில் வெளியில் இருந்து வீட்டுக்குள் வரும்போது வலதுபுறம் ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பு வைக்கலாம் கல் உப்பு வைப்பது மிகவும்  சிறப்பு.

அதன் மீது ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு பாதியில் மஞ்சள், அல்லது சந்தனம், குங்குமம் வைக்கலாம்.

இதனால் வீட்டில் இருக்கக்கூடிய வெளியில் இருந்து வீட்டிற்குள் வரக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி வீட்டில் எப்போதும் நேர்மறை அதிர்வலைகள் நிறைந்து இருக்கச் செய்யும்.

வீட்டின் பூஜையறையில் ஒரு தட்டில் அட்சதை வைத்து அதில் இரண்டு காசுகளை போட்டு வைக்கலாம். இதனால் வீட்டில் சுபிட்சம் கிடைக்கும்.

வீட்டின் உட்புறம் இடது பக்கத்தில் ஒரு சிறிய தட்டில் பச்சை கற்பூரம், சாதாரண கற்பூரம் சேர்த்தும் வைப்பதால் பச்சை கற்பூரம் நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதுடன், வீட்டில் தெய்வீகத்தன்மையை எப்போதும் நிலைத்திருக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் இந்த சின்ன மாற்றத்தை காட்டுங்கள்.. குடும்பம் சொர்க்கமாக மாறும்!
vastu tips tamil

வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்து எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து நிம்மதி மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும்.

வீட்டில் சண்டை சச்சரவுகளை தவிர்த்து மென்மையான ஆன்மீக பாடல்கள் அல்லது மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம். இதனால் எதிர்மறை ஆற்றலை விரட்டும்.

வீட்டை எப்பவுமே சுத்தமாக வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல்கள் விலகி, வீட்டில் எப்போதும் ஆரோக்கியம், முன்னேற்றம் செல்வ வளம், நல்வாழ்வு மன மகிழ்ச்சி தரும் வீடாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com