மழைக்காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை பாதுகாக்க சில டிப்ஸ்கள்!

SmartPhone
SmartPhone pixabay.com

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களே கிடையாது அது என்ன விலையாக இருந்தாலும் கையில் எடுத்துச் செல்லவேண்டிய நிலைதான் உள்ளது. அதுவும்இந்த மழை காலத்தில் அந்த ஸ்மார்ட் ஃபோனை பாதுகாப்பது என்பது கைக்குழந்தையை பொக்கிஷமாக பாதுகாப்பது போல் தான். ஸ்மார்ட் ஃபோனில் நீர் புகாமல் அதை எப்படி பாதுகாப்பது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்..

நீர் புகாத ஸ்மார்ட் போன் கவர்கள்:

ஸ்மார்ட் ஃபோன்களை நீண்ட நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகம் செலவு செய்கிறோம். அதுபோல போன் கேஸை வாங்கும் போதும் தரமாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே நுழையமுடியாத வகையில் உருவாக்கப்பட்ட வாட்டர் ப்ரூப் மொபைல் கேஸ்கள் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் போன் கீழே விழுந்தாலும் கீறல் விழாமல் தண்ணீர் பட்டாலும் ஏதும் கோளாறு ஏற்படாமல் சமாளிக்கலாம்.

தற்காலிகமாக உதவும் ஜிப் லாக்:

வாட்டர் ப்ரூப் கேஸ் இல்லாத நேரத்திலோ அல்லது விலை அதிகமாக இருப்பதாக கருதினால் அதற்கு பதிலாக ஜிப் லாக் பயன்படுத்தலாம் மழை நீரிலிருந்து உங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை பாதுகாக்க உதவியாக இருக்கும். ஆனால், இது தற்காலிக முறைதான்.

குடைக்குள் செல்போன்:

கனமழையின்போது போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத விதமாக அதிக மழைநீர் ஃபோன்களுக்குள் சென்று விட்டால் அது போனின் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும். மிக அவசியமான சமயங்களில் குடைகளுக்கு உள்ளே வைத்து பயன்படுத்துங்கள் அல்லது மழை பாதிக்காது இடங்களில் ஒதுங்கி பயன்படுத்த வேண்டும்.

ஈர கைகளுடன் தொடக்கூடாது:

ஈர கைகளுடன் போன்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் கைகள் ஈரமாக இருக்கும்போது பிடிமானம் சரியாக இருக்காது இதன் காரணமாக மழை நீரில் அல்லது தேங்கிய  தண்ணீரில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது செல்போனை கர்ச்சீப்புக்குள் வைத்த படி பேசினால் கூட தப்பில்லை.

ஆன் செய்யக்கூடாது:

செல்போனில் மழை நீர் பட்டுவிட்டாலும் தண்ணீர் பட்டு விட்டாலும் உடனடியாக அதன் கவர்களை மேலிருந்து எடுத்துவிட்டு நன்றாக துடைக்க வேண்டும். போனை உடனே சுவிட்ச் ஆப் பண்ண வேண்டும். போன் இயங்குகிறதா என்று அதில் மழை நீரோ தண்ணீரோ இருக்கும் போது அதை இயக்கி பார்க்கக் கூடாது. போன் காயும் வரை அதில் உள்ளே உள்ள சிம்கார்டு மெமரி கார்டு போன்றவற்றை வெளியே எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

மிக இலகுவான பஞ்சு போன்ற துணி வைத்து போனை மெதுவாக துடைக்க வேண்டும் அழுத்தி துடைத்தால் போன்களில் உள்ள மேலே உள்ள ஸ்கிரீன் அமுக்கும் பட்டன்கள் அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தி  பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஈரபதத்தை ஈர்க்கும் அரிசி:

ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனடியாக அதனை மேற்பரப்பை துடைக்கவேண்டும். பின்பு அரிசி பாத்திரத்தில் போனை நன்றாக உள்ளே வைத்தால் ஒரு நாள் கழித்து எடுத்தால் அதில் உள்ள ஈரபதத்தை அரிசி உறிஞ்சிக்கொள்ளும். அதன்பிறகு அருகே உள்ள சர்வீஸ் சென்டரில் கொடுத்து சர்வீஸ் செய்து விட்டு வருவது நல்லது.

சிறியது நல்லது:

மழை காலத்தில் வெளியில் செல்லும்போது சிறிய செல்போனை கொண்டு போவது மிகவும் நல்லது. ஸ்மார்ட் ஃபோன்களை கொண்டு போனால் அதில் பழுது ஏற்பட்டுவிட்டால் அதில் உள்ள முக்கியமான தகவல்கள் மீண்டும் நமக்கு கிடைப்பது அரிதாகிவிடும். அதனால் ஒரு அவசரத்துக்கு போன் பேசும்படி உள்ள சிறிய செல்போனை கொண்டு செல்வதே நல்லது.

ஸ்மார்ட் போனையும் ஒரு கைக்குழந்தை போல் தான் பயன்படுத்த வேண்டும் அசால்டாக பயன்படுத்தினால் அது அம்பதாயிரம் ரூபாய் ஆனாலும்  பணம் நம்மை பதம் பார்த்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com