பள்ளிக்குத் திரும்பும் குழந்தைகள்: பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

how-to-prepare-kids
how-to-prepare-kids
Updated on

ஜூன் மாதம் முதல் முதன் முதலாக பள்ளி செல்லும் குழந்தைகளும், ஏற்கனவே படிக்கும் பிள்ளைகள் விடுமுறைக்குப் பின் செல்லும்போது சில குழந்தைகள் முரண்டு பிடிக்கும். இதற்கு செய்யவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.

பள்ளிக்கு செல்லும்போது  அனைத்தும் வாங்கி ரெடியானாலும் சில அம்மாக்களுக்கு இந்தப் பள்ளி குழந்தைகளுக்குப் பிடிக்குமா? சண்டை போடுவானா? நண்பர்களோடு அனுசரித்து செல்வானா? (ளா)? ஒழுங்காகச் சாப்பிடுவானா? என்றெல்லாம் ஏகப்பட்ட கவலைகள் வரும். இதற்குரிய சில யோசனைகள் சில பார்ப்போம்.

ஒழுக்கமும், பாதுகாப்பும் முக்கியம்

ஏதோ ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து எல்லாக் குழந்தைகளையும் போல் நம் குழந்தையையும் அனுப்பி வைத்தோம் என்று இருக்க வேண்டாம். குழந்தைக்குக் கல்வி போலவே ஒழுக்கமும் பாதுகாப்பும் முக்கியம். அதிலும் அக்கறை காட்டும் பள்ளியில் சேர்க்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு.

பள்ளிக்கு  நேரத்தில் கிளம்ப பழக்க வேண்டும்.

பள்ளி திறப்பதற்கு முன்பே குழந்தைகளை பள்ளி நேரத்திற்கு பழக்கப்படுத்த வேண்டும். இஷ்டத்திற்கு நினைத்த நேரத்தில் விழிக்கும் குழந்தைகளை பள்ளிக்கு திறக்கும் நேரத்தில் பெற்றோர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். இந்த அவஸ்தையை தவிர்க்க துவக்கத்திலிருந்தே பள்ளிக்கு சுயமாக கிளம்புவதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

பள்ளியை முதலில் காண்பியுங்கள்.

பள்ளி திறக்கும் முதல் நாளில் அவசர அவசரமாக குழந்தை அழைத்து வந்து பள்ளியின் வாசலில் விட்டு உள்ளே போ... என்று சொல்லும்போது குழந்தைக்கு அது திடீர் திணிப்பு போல் தோன்றும். அவர்கள் அங்கேயே உதட்டை பிதுக்குவார்கள் பள்ளி திறக்கும் முன்பே அங்கு அழைத்துச்சென்று காண்பித்து பழக்குங்கள். தயக்கம் அகன்று நெருக்கம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
மார்க் குறைய இதுதான் காரணம்! உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் எளிய வழிகள்!
how-to-prepare-kids

முதல் நாள் குழந்தை அழுதால் கவலைப்படாதீர்கள். காலம் முழுக்க அழும் என்று தப்பு கணக்கு போடாதீர்கள் அழுகை அதுவாகவே சரியாகிவிடும். குழந்தை அழுவைதை ஒரு பெரிய விஷயமாக வீட்டில் விவாதிக்க வேண்டாம். மறுநாள் அழுதால் தண்டனை தருவேன் என்று மிரட்டவும் வேண்டாம். அழுதாலும் பள்ளி மீதான ஆர்வம் குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

பள்ளியை பற்றி பயமுறுத்தாதீர்கள்

விளையாட்டுக்காகவோ, பயமுறுத்தும் விதமாக பள்ளியைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது. நீ இப்படி ஏதாவது பிடிவாதம், தொந்தரவு செய்தால் இப்போதே பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிடுவேன், மிஸ் உன்னை அடி பின்னிடுவாங்க.  எனச் சொல்லி பயமுறுத்தக் கூடாது. இதனால் பிள்ளைகளுக்கு டீச்சர் மேல் இருக்கும் அன்பு அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்தும். உற்சாகப்படுத்துங்கள்.

பள்ளியை பற்றிய மகிழ்ச்சியான சிந்தனைகள் குழந்தைகள் மனதில் உருவாக வேண்டும். அதற்கு கல்வியைப்பற்றிய நல்ல  விஷயங்களை அவர்கள் காதில் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பள்ளிக்கு செல்வது ஜாலியான புதிய அனுபவம். நண்பர்கள் நிறைய பேர் கிடைப்பார்கள். அவர்களோடு ஆடலாம், விளையாடலாம் எங்களை வளர்த்தது பள்ளிதான்! எங்களைப் போல வளர்வாய்! என்றெல்லாம் குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். இதனால் பிள்ளைகள ஆர்வமுடன்  பள்ளி செல்வார்கள்.

குழந்தை முதல் நாள் பள்ளி அடியெடுத்து  வைக்கும்போதே இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் குழந்தையும் குதித்து விடுகிறது. அங்கே தாக்கு பிடிக்கக் கூடிய மனமும், கடும் உழைப்பும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை புரிந்து குழந்தை செயல்படும். ஆற்றலும் தோல்வியைக்கண்டு துவளாத மனோதிடமும் தேவை. அவை இயல்பாக வளர அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com