

மழைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் நீர்க்கசிவு வீட்டில் உள்ள மரச்சாமான்கள், மெத்தை மற்றும் சோபாக்களைப் பாதிக்கலாம். அவற்றைப் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய முக்கியமான நடைமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன (Wooden Furniture Protect tips).
* மழைக்காலம் தொடங்குவதற்கு முன், மரச்சாமான்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க நீர் புகா வார்னிஷ் அல்லது அரக்கு பூசலாம். இது மரத்தில் ஈரப்பதம் ஊடுருவுவதைத் தடுக்கும் பாதுகாப்பு அடுக்கை உருவாக்கும். அடிக்கடி பாலிஷ் செய்வது மரச்சாமான்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
* மழைக்காலத்தில், உலர்ந்த மென்மையான துணியைப் பயன்படுத்தி உங்கள் மர தளபாடங்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அதிக தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்படும்போது லேசான கிளீனர்கள் அல்லது மர தளபாடங்களை பாதுகாக்கும் லிக்விட்களை பயன்படுத்தவும்.
* வீட்டின் கூரை, மாடித் தளம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் உள்ள விரிசல்கள் அல்லது ஓட்டைகளைக் கண்டறிந்து உடனடியாகச் சரிசெய்யவும். இதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் கசிவைத் தடுக்கலாம்.
* மரச்சாமான்களை சுவர்களில் இருந்து குறைந்தது 3–6 அங்குல தூரத்திற்கு தள்ளி வைக்கவும், குறிப்பாக வீட்டில் ஈரப்பதம் உள்ள பகுதிகளில். இது காற்றோட்டத்தை ஏற்படுத்துவதுடன், தளபாடங்களுக்குப் பின்னால் பூஞ்சை உருவாவதைத் தடுக்கிறது.
* உங்கள் வீட்டில் தளபாடங்களால் ஆன சோஃபாக்கள், நாற்காலிகள் அல்லது மேசைகளை துணி அல்லது பிளாஸ்டிக் கவர்களால் மூடி பாதுகாக்கலாம். குறிப்பாக மழைநீர் படும் பகுதிகளான பால்கனிகள், மாடிபடிக்கட்டு கைப்பிடி, வராண்டாக்களில் பிளாஸ்டிக் கவர்களால் மூடி வைக்கலாம்.
* தளபாடங்களில் இயற்கையாக ஏற்படும் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க மர எண்ணெய் அல்லது மெழுகு (ஆளி விதை அல்லது தேக்கு எண்ணெய் போன்றவை) தடவவும். இது தளபாடங்களின் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஈரமான காற்றிலிருந்து ஒரு கேடயமாக பாதுகாக்கிறது.
* நீர்ப்புகாப்பூச்சு தேவைப்பட்டால், கூரைகள் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு வாட்டர் புரூப் கோட்டிங் பூசுவது நீர்க் கசிவைத் தடுக்க உதவும்.
* ஜன்னல் மற்றும் கதவுகளில் உள்ள இடைவெளிகள் வழியாக மழைநீர் உள்ளே வராமல் இருக்க, அவற்றின் இணைப்புகளை சரிபார்த்து, சீலண்ட் அல்லது வெதர் ஸ்ட்ரிப்பிங் பயன்படுத்தி அடைப்பது நல்லது.
மழைக்காலத்தில் எதைத் தவிர்க்க வேண்டும்?
* மர நாற்காலிகள் அல்லது மேசைகளின் மரக்கால்கள் அல்லது பேஸ்போர்டுகளைச் சுற்றி ஈரமான துடைப்பான்களைப்(Floor Cleaning Mop) பயன்படுத்த வேண்டாம்.
* தளபாடங்களுக்கு கடுமையான கிளீனர்கள் அல்லது ஆல்கஹால் சார்ந்த ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்த வேண்டாம்.
* ஈரமான தரைகளில் (குறிப்பாக அடித்தளங்கள் அல்லது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில்) மர தளபாடங்களை வைப்பதைத் தவிர்க்கவும்.
பூஞ்சை மற்றும் பூச்சித் தடுப்பு :
* மழைக்காலம் கரையான் தாக்குதல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் குறிப்பாக பழைய மரப் பொருட்களில் கரையான் தாக்குதல் அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்க்க உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உங்கள் வீட்டில் உள்ள தளபாடங்களை பாதுகாக்க உதவும்.
* மரப் பர்னிச்சர்களை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உலர்ந்த, மென்மையான துணியால் துடைத்து, மேற்பரப்பில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை நீக்கவும்.
* மரச் சாமான்களின் மூலைகள் மற்றும் உட்புறப் பகுதிகளில் வேப்ப எண்ணெய் அல்லது கிராம்பு எண்ணெய் தடவுவது பூஞ்சை மற்றும் கரையான்கள் வருவதைத் தடுக்க உதவும்.
* அலமாரிகள், டிராயர்கள் போன்ற மூடிய இடங்களில் சிலிகா ஜெல் பாக்கெட்டுகள் அல்லது நாப்தலின் உருண்டைகள் வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்ச உதவும்.