பெண்களுக்கு குட்நியூஸ்! பட்டுப் புடவையில் கறையா? இனி நோ டென்ஷன்...

sarees
sarees
Published on

பெண்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் கலாச்சாரமான புடவைகளை பெண்கள் அணிந்தாலே அவ்வளவு அழகாக இருக்கும். சமீப காலமாக வெளிநாட்டு பெண்கள் கூட சேலை அணிய விருப்பப்படுகிறார்கள்.

பட்டுப்புடவை என்றால் பெண்களின் பேவரைட் என்றே சொல்லலாம். பெண்களின் இந்த ஆசைக்காகவே லட்சக்கணக்கில் பட்டுப்புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த புடவைகளை எல்லாம் துவைக்கமுடியாது என்பதால் பலரும் ட்ரை க்ளின் செய்வார்கள். ஆனால் புடவைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்திலும், வீட்டில் ட்ரை க்ளீன் செய்ய தெரியாது என்பதாலும், அயன், லாண்ட்ரி கடைகளில் சேலைகளை பெண்கள் கொடுக்கிறார்கள். பெண்கள் எந்த அளவிற்கு புடவையை விரும்புகிறார்களோ, அதை பராமரிப்பதிலும் அதிக அக்கறை காட்டுவார்கள். அப்படி இனி செலவே இல்லாமல் வீட்டிலேயே சேலைகளை ட்ரை க்ளீன் செய்வது எப்படி என பார்க்கலாம்.

முதலில் சேலையை எடுத்து எந்த பகுதிகளில் எல்லாம் கறைகள் இருக்கிறது என தெளிவாக பார்க்க வேண்டும். இதன் பின்னர், கால் பக்கெட் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் உப்புத் தன்மை இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

இந்த தண்ணீருடன் ஒரு ஸ்பூன் ஷாம்பூ, முக்கால் ஸ்பூன் கண்டிஷனர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அரை ஸ்பூன் கம்ஃபோர்ட் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் தண்ணீரில் கலந்த பின்னர், ஒரு மைக்ரோஃபைபர் துணியை இந்த தண்ணீரில் முக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது தண்ணீரில் முக்கி எடுத்த மைக்ரோஃபைபர் துணியை கொண்டு, சேலையில் கறைகள் இருக்கும் இடங்களில் அழுத்தி துடைக்க வேண்டும். இவ்வாறு துடைத்து எடுத்த பின்னர், அதிகம் வெயில் படாத இடத்தில் சேலையை காய போட வேண்டும். அதிக வெயிலில் துணியை காய போட்டால் துணியின் நிறம் மற்றும் தன்மை விரைவாக மாறிவிடும்.

இதையடுத்து, காய்ந்த சேலையை எடுத்து வீட்டில் அயன் செய்யலாம். முதலில் சேலையின் பார்டரில் இருந்து மற்ற பகுதிகளுக்கு அயன் செய்ய வேண்டும். இப்படி செய்தால் நாமே வீட்டில் டிரை கிளீன் செய்தது போல் புடவை பளிச்சிடுமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com