கரப்பான்பூச்சிக்கு சர்க்கரை வச்சு விரட்டுவது எப்படி? இந்த சீக்ரெட் தெரிஞ்சா நீங்கதான் கிங்!

cockroaches
cockroaches
Published on

நம்ம வீட்ல நாம நிம்மதியா இருக்கோமோ இல்லையோ, கரப்பான்பூச்சிகள் ரொம்பவே சந்தோஷமா வாழுதுங்க. நாம லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கப் போனதுக்கு அப்புறம், கிச்சனோட உண்மையான ஓனருங்க மாதிரி அதுங்க ராஜ்யம் நடத்த ஆரம்பிக்கும். 

காலையில எழுந்து கிச்சனுக்குள்ள லைட்டைப் போட்டா, நாலா பக்கமும் சிதறி ஓடுறத பார்க்கும்போது வர்ற கோபம் இருக்கே, அப்பப்பா! இதுக்காக கடைகள்ல கிடைக்கிற ஸ்ப்ரே, சாக்பீஸ்னு எல்லாத்தையும் வாங்கிப் பயன்படுத்தி இருப்போம். ஆனா, ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் அதே இடத்துல வந்து நிற்குங்க. அதுலயும் சமையல் அறையில, சாப்பாடு பொருட்கள் பக்கத்துல எல்லாம் இந்த கெமிக்கல் ஸ்ப்ரே அடிக்கிறதுக்கு மனசே வராது. 

இந்த எல்லாப் பிரச்சனைக்கும் நம்ம அஞ்சறைப் பெட்டியிலயே ஒரு சூப்பர் தீர்வு இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா? வாங்க, அதைப் பத்திப் பார்ப்போம்.

சர்க்கரை + கிராம்பு கலவை!

கரப்பான்பூச்சியை விரட்ட சர்க்கரை எதுக்குன்னு நீங்க யோசிக்கலாம். இங்கதான் ஒரு சின்ன தந்திரமே இருக்கு. இது ஒரு மாதிரி "விருந்தாளிக்கு விஷம்" வைக்கிற டெக்னிக் தான். சர்க்கரையோட இனிப்பு வாசனை கரப்பான்பூச்சிகளை ரொம்ப ஈஸியா கவர்ந்து இழுக்கும். 

"ஆஹா, நமக்கு பார்ட்டி"ன்னு நினைச்சு அதுங்க கிட்ட வரும். ஆனா, அதுகூடவே நாம சேர்த்திருக்கிற கிராம்பு இருக்கே, அதோட வாசனை கரப்பான்பூச்சிகளுக்கு சுத்தமா பிடிக்காது. கிராம்புல இருக்கிற ஒருவிதமான காரத்தன்மை கொண்ட எண்ணெய், அதுகளுக்கு ஒரு விதமான அலர்ஜியை உண்டாக்கி, அந்த இடத்துக்கே வராமல் விரட்டி அடிச்சிடும். 

இதையும் படியுங்கள்:
ஒத்தையா உள்ள முடி கத்தையா வளரணுமா? இதை ட்ரை பண்ணுங்க!
cockroaches

செய்முறை: இதை செய்யுறது ரொம்பவே சுலபம். முதல்ல, ஒரு மிக்ஸி ஜார்லயோ இல்ல சின்ன உரல்லயோ ஒரு ரெண்டு ஸ்பூன் சர்க்கரையை எடுத்துப் போட்டு நல்லா நைசா பொடி பண்ணிக்கோங்க. 

அப்புறம், அதோட ஒரு 10 லிருந்து 15 கிராம்பை சேர்த்து அதையும் நல்லா தூள் தூளா அரைச்சுக்கோங்க. இப்போ இந்த சர்க்கரை-கிராம்பு பொடியை ஒரு கிண்ணத்துல போட்டு, அது மூழ்கிற அளவுக்கு கொஞ்சம் தண்ணி ஊத்தி நல்லா கலக்குங்க. 

சர்க்கரை கரைஞ்சதும், ஒரு டீ வடிகட்டியை வெச்சு அந்த தண்ணியை மட்டும் தனியா வடிகட்டி எடுத்து, ஒரு பழைய ஸ்ப்ரே பாட்டில்ல ஊத்தி வெச்சுக்கோங்க. அவ்வளவுதான், கரப்பான்பூச்சியை விரட்ட நம்ம வீட்டு மூலிகை ஸ்ப்ரே தயார்.

இதையும் படியுங்கள்:
எப்போது தீரும் இந்த  சிப் தட்டுப்பாடு?
cockroaches

எப்படிப் பயன்படுத்துவது?

இந்த ஸ்ப்ரேயை கரப்பான்பூச்சி நடமாட்டம் அதிகமா இருக்குற எல்லா இடங்கள்லயும் நீங்க தாராளமா அடிக்கலாம். முக்கியமா, கிச்சன் சிங்க் ஓட்டை, கேஸ் சிலிண்டருக்கு அடியில, குப்பைத் தொட்டி பக்கத்துல, சுவரோரங்கள், கப்போர்டுகளுக்கு உள்ளேன்னு அதுங்க பதுங்கி இருக்குற எல்லா இடங்கள்லயும் ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி நல்லா ஸ்ப்ரே பண்ணி விடுங்க. 

இது முழுக்க முழுக்க இயற்கையான பொருட்கள்ல செஞ்சதால, சமையல் மேடை மேல ஸ்ப்ரே பண்ணிட்டு, காலையில ஒரு ஈரத்துணி வச்சி தொடச்சா போதும். எந்தப் பக்க விளைவும் இருக்காது. கெமிக்கல் ஸ்ப்ரே மாதிரி மூச்சு முட்டாது, குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

இந்த முறையை வாரம் ரெண்டு தடவை தொடர்ந்து செஞ்சிட்டு வந்தீங்கன்னா, கொஞ்ச நாள்லயே உங்க வீட்டுப் பக்கம் கரப்பான்பூச்சிகள் எட்டிப் பார்க்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com