கேலி கிண்டல் செய்யும் நபர்களுக்கு... நீங்க எப்படி பதிலடி கொடுக்கணும் தெரியுமா?

how to respond teasing
how to respond teasingImg credit: Freepik
Published on

நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் பலவிதம் அவர்களின் ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எப்படி இருந்தால் என்ன நாம் அவர்களோடு பயணித்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் உணர்ச்சிகள் மற்றும் சில குணாதியசங்கள் இருக்கும். இது அவர்களை பற்றியும், அவர்களின் ஆளுமையை பற்றியும் நமக்கு நிறைய தெரிவிக்கும். இங்கு எல்லா மக்களும் நல்லவர்களும் அல்ல, அதேபோல எல்லா மக்களும் கெட்டவர்களும் அல்ல. சில மக்கள் நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். சிலர் கிண்டல் செய்யும் நபர்களாக இருப்பார்கள். எதுவாயினும், மற்றவர்களை காயப்படுத்தும் எந்த நகைச்சுவையும் கிண்டலும் நல்லதல்ல. மக்களுடன் பழகும் போது பலர் எளிதாக கிண்டல் அடிக்கிறார்கள். இது மற்றவர்களின் மனதை எவ்வளவு மோசமாக பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.

மேலும் அப்படி கிண்டல் அடிக்கும் நபர்கள், உண்மையிலேயே மோசமானவர்களாகவும் கீழ்த்தரமானவர்களாகவும் இருக்கலாம். சராசரியான மக்கள் இதுபோன்ற கேலிக்குரிய நபர்களைக் கையாள்வது சவாலானதாக இருக்கும். ஆனால் அத்தகைய நபர்களைக் கையாளும் போது நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில உத்திகள் உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலைகளை நீங்கள் அடிக்கடி சந்தித்திருந்தால் அல்லது எதிர்கொண்டிருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது.

அமைதியாய் இருங்கள்:

கிண்டல் பேசுவோரின் கருத்துக்கள் அல்லது கிண்டல் உங்கள் உணர்ச்சிகளை பாதிக்க விடாமல், அமைதியாக இருப்பது முக்கியம். ஏனெனில், இந்த நபர்கள் உங்கள் எதிர்வினையைத் தோண்டி, அவர்களுக்கு எதுவும் கிடைக்காதபோது, அது அவர்களைக் கலவரப்படுத்துகிறது. இதனால், அவர்கள் உங்களை மேலும் தூண்டலாம். அந்த நேரம் ஆழ்ந்த மூச்சை எடுத்து, அவர்களின் நடத்தை உங்களுடையது அல்ல, அவர்களின் சொந்த பிரச்சினைகளின் பிரதிபலிப்பு என்பதை அவர்களுக்கு நீங்கள் நினைவூட்டுங்கள்.

தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்:

கிண்டல் அடிப்போரின் கருத்துக்களை உங்கள் மனதிற்குள் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அத்தகையவர்களுக்கு வாய் பேச்சு அதிகம். அவர்களின் கிண்டல் பேச்சு உங்களை காயப்படுத்தலாம். மோசமான மற்றும் கிண்டலான கருத்துக்கள் உங்களைப் பற்றிச் சொல்வதை விடச் சொல்லும் நபரைப் பற்றி அதிகம் கூறுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்வது முக்கியம். யாருடைய எதிர்மறையும் உங்கள் தகுதி அல்லது திறன்களை பிரதிபலிக்க விடாதீர்கள். ஆதலால், இதுபோன்ற தேவையற்ற நபர்களின் பேச்சுக்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

கருணையுடன் பதிலளிக்கவும்:

கோபம் அல்லது தற்காப்புடன் செயல்படுவதற்குப் பதிலாக, கருணையுடன் பதிலளிக்க வேண்டும். சில நேரங்களில், ஒரு நேர்மறையான பதில் நபரை நிராயுதபாணியாக்கி, நிலைமையை மோசமாக்கலாம். ஆதலால், உங்களை கோப்படுத்தும் நபர்களுக்கு இரக்க குணத்துடன் பதிலளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே! கல்லூரியில் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற சரியான துறையை தேர்ந்தெடுப்பது எப்படி?
how to respond teasing

நகைச்சுவையை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்:

உங்களுக்கு நகைச்சுவையாக பேசுவது வரும் என்றால், கிண்டலாக பேசும் நபர்களுக்கு நீங்கள் நகைச்சுவையாக பதிலளிக்கலாம். கிண்டலான கருத்துகளுக்கு பதிலளிக்க நகைச்சுவையைப் பயன்படுத்தலாம். இருப்பினும், அவை சரியானதாகவும், பதற்றத்தைத் தணிக்கவும் மற்றும் அவர்களின் கருத்துகளை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதைக் காட்டும் இலகுவான பதிலாகவும் இருக்க வேண்டும்.

எல்லைகளை அமைக்க வேண்டும்:

ஒரு நபரின் கிண்டலான நடத்தை கையாள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தால், எல்லைகளை அமைப்பது மிகவும் முக்கியம். பணிவாகவும் உறுதியுடனும் அந்த நபரின் கருத்துகள் உங்களை புண்படுத்துவதாகத் தெரியப்படுத்துங்கள். மேலும், இதுபோன்று பேசுவதை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள். உங்கள் எல்லைகள் குறித்து தெளிவாகவும் உறுதியாகவும் இருங்கள். இதற்காக விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

நீங்கள் உங்கள் வார்த்தைகளை மட்டுமே கட்டுப்படுத்த முடியும், மற்றவர்களை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் மற்றவர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்வார்கள். மேற்கூறிய குறிப்புகள் அத்தகையவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி சூழ்நிலை இல்லையென்றால், அமைதியாக இருங்கள் அல்லது அந்த நபரை விட்டு விலகி இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com