கட்டுவிரியன் பாம்பு கடிச்சா வலியே இருக்காது... இந்த அறிகுறிகளை வச்சு தான் நாம கண்டுபிடிக்க முடியும்!

Kattuviriyan
Kattuviriyan
Published on

பாம்பு கடி, இது உலகளாவிய மனித இனத்திற்கு அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது.

இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்திற்கு லட்சக்கணக்கான  பாம்பு கடியால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் 58 ஆயிரம் பேர் பாம்பு கடியால் இறந்தும் போகிறார்கள். இதுவே உலக அளவில் பார்க்கும்போது, ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் பாம்பு கடியால் இறந்து போகிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் போகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்பினங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில குறிப்பிட்ட வகை பாம்புகளுக்கு மட்டுமே மனிதனை கொல்லக் கூடிய நச்சு இருக்கின்றன. நம் வீட்டை சுற்றி பெரும்பாலும் வரும் பாம்புகள் நாகப்பாம்புகள், நல்ல பாம்புகள், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டுவரியன் ஆகும். இதுபோன்ற பாம்புகள் தான் மிகவும் விஷமுள்ளவை.

அதில் கட்டு வரியன் என்கிற பாம்பு கடித்தால், நமக்கு எவ்வித வலியோ, அறிகுறியோ ஏற்படுவதில்லை. அப்புறம் எப்படி? கட்டுவரியன் பாம்பு தான் கடித்து விட்டது என்று கண்டுபிடிக்க முடியும்? என்பதை இந்தப் பதிவில் முழுமையாக பார்ப்போம். 

கட்டுவரியன் பாம்பு எப்படி இருக்கும்?

“கட்டுவிரியன்”என்ற பெயரைத் தான் நம் பெரும்பாலும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த பாம்பின் உண்மையான பெயர் கட்டு வரியன் தான்!

இந்த பாம்புகள் பார்ப்பதற்கு, உடல் முழுவதும் கருமை நிறமாகவும் அல்லது நீல நிறம் கலந்த அடர் கருப்பு நிறமாகவும் காணப்படும். இரவில் பார்ப்பதற்கு உடல் பளபளவென்று மின்னும். உடல் முழுவதும் சிறிது இடைவெளி விட்டு விட்டு குறுக்கே வெள்ளை நிறத்தில் கோடுகள் காணப்படும். இளம் பாம்புகள் என்றால் கோடுகள் பளிச்சென்று தெரியும். அதுவே வயதான பாம்புகள் என்றால், கோடுகள் மங்கிய நிலையிலும், புள்ளிகளை இணைத்தது போல் கோடுகள் காணப்படும்.இதன் தலைப்பகுதி மழுங்கி, சிறிய வட்ட வடிவ கருநிறக் கண்களைக் கொண்டிருக்கும். கழுத்தில் ஆரம்பித்து வால் பகுதி வரை கோடுகள் காணப்படும்.

இவ்வகை பாம்புகள் நமது சுற்றுப்புறங்களிலும் பரவலாக காணப்படுகின்றன.

கட்டுவரியன் பாம்பின் விஷத்தின் ஆபத்து என்ன?

கட்டுவிரியன் பாம்பினுடைய நஞ்சானது, நியூரோ டாக்ஸின் என்ற வகையைச் சார்ந்தது. இந்த நஞ்சு மனிதனுடைய நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகின்றன. இதனால் கடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இறப்பு ஏற்படுகிறது. மற்ற பாம்புகளை விட, இந்தக் கட்டு வரியனின் விஷமானது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உஷார்! இந்த 'பறக்கும் பாம்பு' உங்க வீட்டுப் பக்கம் வந்தா... நீங்க என்ன பண்ணுவீங்க?
Kattuviriyan

பாம்பு கடித்தவுடன் ஏன் வலியோ, அறிகுறிகளோ தெரிவதில்லை?

பெரும்பாலும், இந்த வகை பாம்புகள் இரவு நேரங்களிலேயே வெளியே வருகின்றன. எனவே இதனை இரவாடிகள் என்றும் கூறுவார்கள். காலை நேரங்களில் வெப்பம் குறைவான பகுதிகளிலும், பாறை இடுக்குகளிலும், இலைகள் புல்வெளிகள் போன்ற பகுதிகளில் தன்னை மறைத்து கொண்டும் இருக்கும்.

நாம் தூங்கும் போதோ அல்லது ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதோ, இந்தப் பாம்பு கடித்தால் நமக்கு வலி ஏற்படுவதில்லை. ஏனென்றால் இந்த பாம்பின் நச்சுப் பல்லானது மிகவும் சிறியதாக இருக்குமாம். அதேபோல் கடித்த எடுத்து சுற்றி வலியோ, வீக்கமோ காணப்படுவதில்லை.

ஏனென்றால் இந்த விஷமானது நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்குவதால் வீக்கம், அரிப்பு, மயக்கம் இது போன்ற அறிகுறிகள் நமக்கு ஏற்படுவதில்லை. எனவே  இந்த பாம்பின் “நியூரோ டாக்ஸின்” விஷமே இதற்கு காரணமாகும்.

கட்டு வரியன் பாம்பு கடித்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்ன? 

முதலில் இந்த பாம்பு கடித்தவுடன் விஷமானது, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்குகின்றன. நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், கண்ணின் இமைகள் மூடியபடி தொங்கிய நிலையில் காணப்படும். அதேபோல், வாயை திறந்து பேசவும் முடியாமல் போகும். சிறிது நேரம் கழித்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
நம் உடல் தோற்றம் பொலிவுறவும், பள பள சருமம் பெறவும் பருக வேண்டிய பத்து வகை ஜூஸ்கள்!
Kattuviriyan

கன்னங்களும், உடல் தசைகளும் இறுக்க தன்மையாக மாறிவிடும். கண்ணின் இமைகளை அசைக்க முடியாமல் போகும். உமிழ்நீர் சுரப்பியை முழுங்க முடியாமலும், நாக்கை அசைக்க முடியாமலும் போகும். அதேபோல் எச்சில் வடிய தொடங்கும். இறுதியாக, கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும். அதற்குப்பின் மரணம் ஏற்பட்டுவிடும். 

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் முதலுதவி. 

பாம்பு கடித்த உடனே முதலில் மருத்துவமனைக்கு எவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டுமோ! அவ்வளவு வேகமாக செல்ல வேண்டும்.

மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே சற்றும் யோசிக்காமல் மருத்துவமனை நாட வேண்டும். ஏனென்றால், கட்டுவரியன் பாம்பு கடித்தால் நமக்கு அவ்வளவு சீக்கிரமாக அறிகுறி ஏற்படுவதில்லை.

இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். டார்ச் லைட் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். செப்பல் மிகவும் முக்கியம். 

இப்படி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமக்கு நாமே வகுத்துக் கொண்டால் மட்டுமே, இதுபோன்ற பாம்பு கடி உயிரிழப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com