தக்காளி சட்னி
தக்காளி சட்னி

ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

சமீபத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரும் என்ன சாப்பிட வேண்டும், சாப்பிட கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில், புற்றுநோய் விளைவிக்க வாய்ப்புள்ள பொருட்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களும் இடம்பெற்றுள்ளன... அவை என்னென்ன பொருட்கள் என்பதை இந்த சிறப்புத் தொகுப்பில் பார்க்கலாம்…

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு சமீபத்தில் ஒரு பட்டியலை வெளியிட்டது. அந்த பொருட்களில் உள்ள சில கூறுகள் புற்றுநோயை விளைவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. அதில், உடலுக்குக் குளிர்ச்சி என நாம் பல வகைகளில் பயன்படுத்தும் கற்றாழை சாறில் உள்ள சில கூறுகள், புற்றுநோயை விளைவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது

மற்றொரு ஆச்சிரியப்படுத்தும் பொருளாக பட்டியலில் இடம்பெற்றிருப்பது, ஊறுகாய். காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஊறுகாய்களால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக WHO குறிப்பிட்டுள்ளது. செயற்கை இனிப்பூட்டியான Aspartame-ஆல் புற்றுநோய் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமாக உள்ள பல குளிர்பானங்கள் உள்பட உலகம் முழுக்க சுமார் 6 ஆயிரம் உணவுப் பொருட்களில் Aspartame பயன்படுத்தப்படுகிறதாம்.

உணவு பொருட்கள் தவிர கைபேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களிலிருந்து வெளியாகும் கதிரியக்க காந்தப்புலங்கள், கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்டவையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும் பணிச்சூழல்களில் dry cleaning, ஜவுளி உற்பத்தித் துறை ஆகியவற்றையும் சேர்த்துள்ளது WHO. எலி, மனிதர்களிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சிக்கு பிறகே, இந்த பட்டியல் வெளியிடப்பட்டாலும், குறிப்பிட்ட உணவு பொருட்களை எந்த அளவுக்கு மேல் உட்கொண்டால், புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது என குறிப்பிடப்படவில்லை.

மேலும், Group 2B வகையிலேயே இந்த பொருட்களை பட்டியிலிட்டுள்ளது WHO. அதாவது. புற்றுநோயை ஏற்படுத்தும் Group 1 என்ற பட்டியலில் மது, கதிர்வீச்சு உள்ளிட்டவை உள்ளன. அநேகமாக புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்ற Group 2A பட்டியலில் காற்றுமாசு, தொடர் இரவு நேரப் பணி ஆகியவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. எதுவாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதையே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com