வாழ்க்கையில் சிறு சிறு இன்னல்களை சமாளித்து விட்டாலே, நிறைய பேர் தங்களை பக்குவப்பட்டு விட்டதாக நம்புகிறார்கள். உண்மையிலேயே பக்குவமான மனிதருக்குத் தேவையான குணங்கள் என்ன? எதை வைத்து ஒருவர் Matured ஆக இருக்கிறார் எனச் சொல்வது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. ஒரு உரையாடல் நடக்கும்போது நீங்கள் அதிகமாக பேச மாட்டீர்கள். அதற்கு பதில் அடுத்தவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அதிகமாகக் கவனிப்பீர்கள்.
2. உங்களுக்குள்ளே ஒரு Self love எப்போதுமே இருக்கும். மற்றவர்கள் நம்மைப் பார்க்க வேண்டும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய மாட்டீர்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டும்தான் செய்வீர்கள்.
3. எந்த ஒரு விஷயமாக அல்லது பிரச்னையாக இருந்தாலும் உங்களுடைய Point of viewல் இருந்து பார்க்காமல் அடுத்தவர்கள் Point of viewல் இருந்து பார்த்து அந்தப் பிரச்னையை தீர்க்க வழி தேடுவீர்கள்.
4. எந்த ஒரு செயலைச் செய்தாலும் அதை முழு பொறுப்போடு செய்வீர்கள். ஏதேனும் பிரச்னை வந்தால் கூட அதை எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடம் இருக்கும்.
5. உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி எதற்குமே அலட்டிக்கொள்ளாமல் அதை சாதாரணமாகக் கடந்து செல்வீர்கள்.
6. எந்தப் பொருள் வாங்கினாலும் தரமாக இருக்கிறதா? என்று பார்த்து வாங்குவீர்கள். Branded Products என்று அதிக பணம் செலவு செய்ய மாட்டீர்கள். அதைப்போலவே உங்களிடம் இருப்பதை மற்றவர்களிடம் காட்டி பந்தா செய்ய மாட்டீர்கள். எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பீர்கள்.
7. தேவையில்லாத Arguments செய்ய மாட்டீர்கள். ‘நீங்கள் சொல்வது சரிதான்’ என்று கூறி அந்தப் பிரச்னையை அத்தோடு முடித்துவிட்டு விலகி விடுவீர்கள்.
8. அடுத்தவர்களை அதிகம் மன்னிக்கக் கற்றுக்கொள்வீர்கள். கோபம் என்பதே உங்களுக்கு வருவது அரிதாகிவிடும். இவற்றில் உங்களிடம் எத்தனை குணங்கள் இருக்கின்றன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.