வாழ்க்கையை புரிந்து கொண்டால் ஆனந்தமாய் வாழலாம்!

If you understand life, you can live happily
If you understand life, you can live happily
Published on

நீங்கள் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும், நம் வயிறுக்கு எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவுதான் சாப்பிட முடியும். அதன் கொள்ளளவு அவ்வளவுதான்.

நீங்கள் எவ்வளவு ஓடி ஓடி உழைத்தும், வாழ்க்கையை எதற்காக வாழ்கின்றோம் என்று அறியாமல் மரணித்தால், அதை விடக் கொடுமை ஒன்று இருக்க முடியாது. நாம் எவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தாலும், நாம் உண்பதும், உடுத்துவதும் மட்டும்தான் நாம் சம்பாதித்ததில் அனுபவிப்பது. மற்றவை அடுத்தவர்களுக்குத்தான்.

நாம் எல்லோருமே ஏதோ ஒரு காரணமாகத்தான் உழைக்கிறோம்; ஓடியாடி சம்பாதிக்கிறோம். ஆனால், அந்தக் காரணம் பிற்காலத்தில் வெற்றாக ஆகி விடுகிறது. ‘நிறைய பணம் சம்பாதித்தால் பிற்காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். நம் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்கு வந்து விடுவார்கள்’ என்றெல்லாம் எண்ணி உழைக்கிறோம்.

‘சம்பாதித்தது போதும், ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிறபோது உடல் நலம் கெட்டு இருக்கும். பிள்ளைகள் வசதி வாய்ப்புகளைப் பெற்று விட்டு நம்மை ஒதுங்கி விடுவார்கள். இன்னும் சிலர் தேவைக்கு அதிகமாக ஆசைப்பட்டு அதற்காக உழைப்பார்கள். அம்முயற்சிகளில் தோல்வியுற்று வாழ்க்கையைத் தொலைப்பார்கள்.

நீங்கள் சற்று நிதானமாக, நன்றாக மூச்சை இழுத்து விட்டு, சுவையாகப் போட்ட இஞ்சி டீயை் ஒரு மடக்கு அருந்திக் கொண்டு, வாழ்வின் யதார்த்தத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனையோ கோடி மக்கள் வந்துபோன இந்த உலகத்திற்கு நாமும் வந்து இருக்கின்றோம். ஆனால், நமக்கு முன்பு வந்தவர்களை நினைத்துப் பார்த்தால், அவர்கள் வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து, உணர்ந்து, வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவித்து, நிம்மதியாகக் கண்மூடிப் போனதை உணரலாம்.

இதையும் படியுங்கள்:
நல்ல சொற்கள் நன்னிலத்தில் விழுந்த விதை போல!
If you understand life, you can live happily

ஆனால், நம்மால் ஒவ்வொரு இரவும் நிம்மதியாக உறங்கக் கூட முடியவில்லையே, ஏன்? வாழ்க்கை முறை (life style) தற்போது மாறி விட்டது. இதற்குக் காரணம் இது இன்றைய சூழ்ச்சியாளர்களின் சூட்சுமம் என்பதுதான் உண்மை. ஆனால் நாம்தான் அதை இன்னும் உணரவில்லை. அதை உணரும்போது நாம் இங்கே இருக்கப்போவது இல்லை.

அதனால் வாழும்போதே முழுமையான கவனத்துடன் நமது வாழ்க்கையைத் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும், ஏன் ஒவ்வொரு நிமிடத்தையும் நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தீர்மானிப்பது நீங்கள்தான். வாழ்க்கை முறையை விழிப்புணர்வோடு அணுகுங்கள். நன்றாகச் சிந்தித்து, வாழ்வின் யதார்தத்தைப் புரிந்து, ஆனந்தமாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com