சேமிப்பு என்பது வெறும் பணம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை பாடம்!

importance of savings
importance of savings
Published on

“சிறு துளி பெரு வெள்ளம்” என்ற பழமொழி சிறு சேமிப்புக்கு மிகச் சரியாகப் பொருந்தும். சிறுவயதிலேயே சேமிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்த்தால், அவர்கள் வாழ்க்கை முழுவதும் அதை ஒரு நல்ல நண்பராகக் கொண்டிருப்பார்கள்.

இன்றைய குழந்தைகள் சாக்லேட், விளையாட்டு பொருட்கள், மொபைல் விளையாட்டுகள் என பல ஆசைகளுடன் வளர்கிறார்கள். ஆசை தவறல்ல. ஆனால் அந்த ஆசைகளை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே பெற்றோரின் முக்கிய பொறுப்பு. அதற்கான முதல்படி சிறுசேமிப்பு.

குழந்தைகளுக்கு தினமும் அல்லது வாரம் ஒரு சிறிய தொகையை பாக்கெட் மணியாக கொடுக்கலாம். அதில் இருந்து ஒரு பகுதியை செலவுக்கு, ஒரு பகுதியை சேமிப்புக்கு என்று பிரிக்கச் சொல்ல வேண்டும். வீட்டில் ஒரு உண்டியல் வைத்துக் கொடுத்தால், அவர்கள் மகிழ்ச்சியுடன் சேமிக்கத் தொடங்குவார்கள்.

அந்த உண்டியல் நிறையும்போது அவர்களுக்கு “நான் சேமித்தேன்” என்ற பெருமை தோன்றும். அதில் சேமித்த பணத்தில் அவர்களுக்குப் பிடித்த ஒரு புத்தகம் அல்லது தேவையான பொருள் வாங்கிக் கொடுத்தால், சேமிப்பின் மகிழ்ச்சியை உணர்வார்கள்.

பள்ளிகளிலும் சிறு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம். சேமிப்பு ஒரு பழக்கம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை பாடம். அந்தப் பாடத்தை சிறுவயதிலேயே கற்றுக்கொடுத்தால், நாளைய சமுதாயம் நிச்சயம் பொருளாதார ரீதியாக வலிமையானதாக மாறும்.

பள்ளியில் விழிப்புணர்வு: பள்ளிகளில் “சிறு சேமிப்பு நாள்” அல்லது “சேமிப்பு போட்டி” போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். மாணவர்கள் தங்கள் சேமிப்பை பங்கேற்று, சிறிய பரிசுகளை பெறுவது அவர்களை மேலும் ஊக்குவிக்கும். ஆசிரியர்கள் பணம் எப்படி சேமிக்க வேண்டும், தேவைகளையும் ஆசைகளையும் வேறுபடுத்துவது எப்படி என்று எளிய விளக்கங்கள் தர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அன்பே அஸ்திவாரம்: உறவுகளைப் பேணும் உன்னதக் கலை!
importance of savings

சிறுசேமிப்பு குழந்தைகளுக்கு பொறுமை, கட்டுப்பாடு, திட்டமிடல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்கிறது. “இன்று சேமித்தால் நாளை பயன்படும்” என்ற எண்ணம் அவர்களின் மனதில் வேரூன்றுகிறது. எதிர்காலத்தில் கல்வி, மருத்துவம், பயணம் போன்ற முக்கிய தேவைகளுக்கு உதவும்.

சிறுசேமிப்பு குழந்தைகளில் நம்பிக்கை, பொறுமை, திட்டமிடல் வளர்க்கும். இது அவர்களுக்கு எதிர்காலத்தை பாதுகாக்கும் சக்தி. இதனை இன்றே தொடங்கி, வாழ்வை சிறப்பாக்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com