
இன்றைய காலத்தில் குழந்தைகள் வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக தான் உள்ளது. ஏனென்றால், டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்தில், பிள்ளைகள் நிமிடத்தில் அதில் சிக்கி விடும் அபாயத்துடனே தான் வாழ்ந்து வருகிறோம். அதில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து வளர்ப்பதே இன்றைய பெற்றோர்களுக்கு பெரிய சவால் தான். அதுவும் தற்போது Parenting எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. நான் ஒரு சிறந்த பெற்றோராக இருக்க வேண்டும் என பெற்றோர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு போட்டியை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
குழந்தைகள் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்க்கலாம்.. குழந்தைகளிடம் நாம் பேச பேச தான், அவர்களையும் புரிந்து கொள்ள முடியும், அவர்களும் நம்மிடம் நெருங்கி நம்மை புரிந்து கொள்வார்கள். அந்த வகையில் நீங்கள் தினசரி உங்களின் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி சில விஷயங்களை சொல்லி கொடுப்பதன் மூலம் அந்த குழந்தை சிறந்தவராக விளங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து:
இந்த பழமொழிக்கு ஏற்ப, வாழ்க்கையில் போதும் என்ற எண்ணத்தை குழந்தைகளுக்கு கற்று கொடுப்பது அவசியமாகும். எனவே இந்த குணம் இருப்பவர்களால் தான் வாழ்க்கையில் பல முன்னேற்றத்தை அடையமுடியும்.
தவறுகள் இயல்பு:
தவறுகள் என்பது இயல்பு தான்.. அதை மீண்டும் மீண்டும் தெரிந்தே செய்வது தான் பெரிய தவறு என்பதை உணர்த்த வேண்டும்.
அன்பு பாராட்டுதல்:
உனக்காக நான் இருக்கிறேன் என்ற வார்த்தை யாரை வேண்டுமானாலும் மாற்றி விடும். அது ஒரு வளரும் பிள்ளைகளிடம் சொல்லும் போது, அந்த குழந்தைகள் எந்த சிக்கலிலும் சிக்காமல் அரவணைப்பாகவும், அன்பாகவும் வாழும்.
பேச நேரம்:
தினமும் குழந்தைகளுக்கான நேரம் என்று ஒதுக்கி கொடுத்து, இந்த நேரத்தில் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் கோபப்படமாட்டேன் தவறாக இருந்தாலும் என்று கூறுவதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் தவறை சரி செய்யலாம்.
மகிழ்ச்சி:
எந்த சூழ்நிலைகளிலும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கற்று கொடுங்கள். எந்த விஷயமும் அவர்களின் மனதை பாதிக்காதவாறு வாழ வேண்டும் என்பதை நினைவு கூறுங்கள்.