
சில செடிகள் அழகாக இருந்தாலும், வீட்டுக்குள் வைக்க இவை நம் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும். அவை எந்தெந்த செடிகள் என்பதைக் காண்போம். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
1. கலேடியம்(யானைக் காது)
இதய வடிவில் பச்சை பசேலென்ற நிறத்துடன் இதன் இலைகளில் ஆக்சலேட் க்ரிஸ்டல்கள் உள்ளதால், சுவாசிப்பதில் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். வளர்ப்புப் பிராணி மற்றும் குழந்தைகளுக்கும் இதைத் தொடுவது நல்லதல்ல. இதைத் தொட்டாலே அரிப்பு ஏற்படுத்தும். ஆகவே, இதை தவிர்க்க வேண்டும்.
2. பஞ்சு செடிகள்
பஞ்சு பூக்கும் போது பார்க்க அழகாக இருந்தாலும், வீட்டிற்குள் வைக்க ஏற்றதல்ல. துரதிஷ்டத்தையும், வறுமையையும் ஏற்படுத்தும் செடி. இது அலர்ஜியையும் உண்டாக்கும்.
3. பாபுல் செடி
முட்கள் கொண்ட செடியான இது சண்டை மற்றும் குழப்பத்தை உண்டாக்கும். வீட்டினுள் வைக்கக் கூடாது என்ற வாஸ்து கூறுகிறது.
4. டயஃபென்பேகியா
இதன் அழகான இலைகளுக்காக சிலர் வீட்டினுள் வைக்க விரும்புவார்கள். இதன் இலைகளில் நச்சுப் பொருளான கால்ஷியம் ஆக்சலேட் இருப்பதால் சுவாசப்பிரச்னை மற்றும் தொண்டை வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
5. இங்க்லீஷ் ஐவி
இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இதன் இலைகளில் சபானின் என்ற நச்சு உள்ளது. அரிப்பை ஏற்படுத்தக் கூடியது. இச்செடி வீட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
6. லில்லி
அமைதி லில்லி, ஈஸ்டர் லில்லி மற்றும் டைகர் லில்லி போன்ற வகைச் செடிகள் செல்லப்பிராணிகள் குறிப்பாக பூனைகளுக்கு நல்லதல்ல. இச்செடி சிறுநீரகம் பிரச்னை ஏற்படுத்தக்கூடியது. வாஸ்துவின் படி இது சோகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
7. காக்டஸ்
இதில் முட்கள் இருப்பதால் வாஸ்துவின் படி இது எதிர்மறை சக்தியை அதிகரிக்கிறது. இதன் முட்களால் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் போன்றவை ஏற்படுவதாகக் தேரிகிறது. ஃபெங் சுயி படி இதை வாசல் மற்றும் படுக்கை அறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
8. ஒலியாண்டர்
அழகான பூக்கள் இருந்தாலும், இச்செடியின் அனைத்து பாகங்களும் நச்சுத்தன்மை கொண்டதாகும். இத்தாவரத்தின் சிறிய அளவு கூட கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும். இதன் இலைச்சாறு தோல் எரிச்சல் அல்லது சொறியை ஏற்படுத்தும்.
ஆகவே, மேற்கூறிய செடிகளை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.