வீட்டில் பல்லி, கரப்பான்பூச்சிகள் தொல்லையா? 1 பாக்கெட் ஷாம்பு போதும்...

Insects prevention
Insects prevention
Published on

நமது வீடுகளை எவ்வளவு சுத்தம் செய்தாலும், பூச்சிகளை ஒழிக்க வழியே இல்லை என பலரும் கவலையில் இருப்பார்கள். அதுவும் இந்த பூச்சிகள் பாத்ரூம், டாய்லெட், முக்கியமாக கிச்சன் என அதிகம் உலாவுவதால் பலரும் அவதிக்குள்ளாகி வருவார்கள். ஒரு பூச்சி வந்துவிட்டால் போதும், அது குட்டி போட்டு வீட்டையே இரண்டாக்கி விடும்.

இனிமேல் கவலையில்லாமல் வீட்டில் உள்ள ஷாம்புவை வைத்தே, பூச்சிகள் வருவதை தடுக்க முடியும். அதற்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க போதும்.

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் ஒரு பாக்கெட் ஷேம்புவை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு மூடி டெட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்த கலவையில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து, 2 மூடி வினிகரை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும். அதன்பிறகு இந்த கலவையில் அரை டம்பளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்து, கதவு ஜன்னல் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்பிரே செய்துவிட வேண்டும். ஷாம்பு, பேக்கிங் சோடா, டெட்டால் ஆகிய பொருட்களின் வாசனை, கரப்பான், பல்லி, எரும்பு ஆகியவற்றிக்கு பிடிக்காது.

இதன் காரணமாக இந்த ஸ்பிரே செய்த இடங்களில் கரப்பான், பல்லி, எரும்பு தொல்லை இருக்காது. ஒரு நாளைக்கு 2 முறை என ஒரு வாரம் செய்தால், கரப்பான், உள்ளிட்ட பூச்சிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும். உங்களால் ஸ்பேரே பண்ண முடியாத இடத்தில் அதிகமாக கரப்பான் இருந்தால், ஒரு டிஸ்யூ பேப்பரில், இந்த லிக்யூடை ஸ்பிரே செய்து, அந்த பேப்பரை, கரப்பான் வரும் இடத்தில் வைத்துவிடலாம். இதை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

நிச்சயம் வீட்டில் உள்ள பூச்சிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

இதையும் படியுங்கள்:
கோடை காலத்தில் வீட்டில் தூசியா? இனி கவலை வேண்டாம்... இந்த எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்!
Insects prevention

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com