
சமீப காலமாகவே சிறு குழந்தைகள் கூட அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்து அதை பற்றி விவாதிக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறர்கள். இந்த காலத்தில் குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பெற்றோர்கள் பலர். இருக்கின்றனர். இந்த நிலையில், பெற்றோர்களுடன் அதிகமாக வாதமாடும் குழந்தைகள் யார் என்பதை அறிவியல் கூட ஆராய்ந்திருக்கிறது. அதுவும் பெண் பிள்ளைகளா, ஆண் பிள்ளைகளா என்பது குறித்து கணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இனிமையான பேச்சுவார்த்தையாக தொடங்கி, பின்னர் விவாதமாக மாறும் இந்த உரையாடல்கள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மனநிலையை வெளிப்படுத்தும் . ஆனால் யார் அதிகம் பேசுகிறார்கள்? யார் அதிகமாக வெல்லுகிறார்கள்? இதோ அதற்கான சுவாரசியமான தகவல்கள்.
இயற்கையான வேறுபாடு: மகன்களும் மகள்களும் பெற்றோருடன் பேசுவார்கள், ஆனால் அவர்கள் பேசும் விதம் மற்றும் அணுகும் முறை மாறுபடும்.
மகள்களின் உணர்வுக் கொடை அதிகம்: மகள்கள், உணர்வுகளை வெளிப்படுத்த அதிக திறன் கொண்டவர்கள். எனவே, அவர்கள் பெற்றோரிடம் மிகத் திறமையாக பேசலாம், கேள்விகளை எழுப்பலாம், விவாதிக்கலாம்.
மகன்களின் நேரடித் தகுதி: மகன்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவும், நேர்மையாகவும் தெரிவிப்பதால், பெற்றோர்கள் அதை 'விவாதம்' என எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம்.
வயது மற்றும் பருவமடைதல் தாக்கம்: பருவ வயதில் இருக்கும் மகன்களும் மகள்களும் தங்களது சுயநிலையை வெளிப்படுத்த அதிகமாக விவாதங்களில் ஈடுபடக்கூடும்.
பெற்றோர் எதிர்பார்ப்பு வேறுபாடு: மகள்களிடம் பெற்றோர்கள் காட்டும் மென்மையான அணுகுமுறையால், அவர்களது விவாதங்கள் மென்மையாக தோன்றும்; அதேபோல், மகன்களின் நேரடியான கேள்விகள் கடுமையாக உணரப்படலாம்.
சூழ்நிலை மற்றும் வளர்ப்பு முக்கியம்: குழந்தைகள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் என்பது அவர்கள் பெற்றவர்களிடம் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம் ஆகும்.
மகள்களின் சமரச மனம்: விவாதங்களில் ஈடுபட்டாலும், மகள்கள் அடிக்கடி சமரசத்தை விரும்புகிறார்கள். அவர்களது மென்மையான அணுகுமுறை உரையாடலின் இறுதியில் சமாதானத்தை தரக்கூடும்.
பெற்றோர்களிடம் அதிகம் மல்லுக்கட்டி நிற்பவர்கள் பெண் பிள்ளைகளா? ஆண் பிள்ளைகளா? - இது ஒரே பதில் கொண்ட கேள்வி அல்ல. குழந்தையின் வளர்ப்பு, குடும்ப சூழ்நிலை, மனநிலை மற்றும் உறவுகள் அனைத்தும் இக்கேள்விக்கு பதிலை வகுக்கின்றன. அவர்கள் வாழும் சூழ்நிலையே குழந்தைகளின் வளர்ப்பில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.