#InternationalDogDay: தமிழ்நாட்டில் உள்ள நாட்டு நாய்கள் என்னென்ன தெரியுமா?

#InternationalDogDay: தமிழ்நாட்டில் உள்ள நாட்டு நாய்கள் என்னென்ன தெரியுமா?

விலங்குகளில் அன்புக்கு இலக்கணமாக இருப்பது நாய்தான். மனிதர்களுக்கும் நாய்களுக்குமான பினைப்பு ஆதிகாலம் முதலே உள்ளது. மிகுந்த அன்பும், விசுவாசமும் கொண்ட நாய்களுக்காக ஆகஸ்ட் 26 சர்வதேச நாய்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் வெளிநாட்டு வகை நாய்கள்தான் வளர்க்கப்படுகின்றன. ஆனால், தற்போது நாட்டு நாய்கள் மீதான விழிப்புணர்வும் மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், நாட்டு நாய்கள் என்றாலே அனைவருக்கும் தெரிந்த பெயர் ராஜபாளையம் நாய் வகைகளைதான். ஆனால், உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இருந்தாலும், அவற்றில் 350 வகை இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. அதில் 7 வகை, இந்திய நாய்களாகும். இதில் கன்னி, கோம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம் ஆகிய நான்கும் நம் தமிழகத்தின் இனமாகும்.

வீரத்திற்கு பெயர்போன ராஜபாளையம் நாய்கள்

ஆசிய கண்டத்திலேயே ஐந்து வகை நாய்கள்தாம் ஒரே நிறத்தில் குட்டி போடுமாம். அதில், ராஜபாளையம் நாயும் ஒன்று. வெளிநாட்டு நாய்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே திறமையாகச் செயல்படும். ஆனால், நமது நாட்டு இனநாய்கள் பிறப்பிலேயே வீரமும் விசுவாச குணமும் அதிகம் கொண்டவை.

எந்தச் சூழலிலும் தன் எஜமானர்களை மாற்றிக் கொள்ளாத குணமுடையது ராஜபாளையம் நாய். மோப்ப சக்தி மிகுந்த இந்த நாய், வீட்டுக்காவலுக்குச் சிறந்தது. பார்ப்பதற்கு கம்பீரத்துடனும் வீரத்துடனும் இருக்கும். இந்நாயின் குட்டிகள் அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்கும். வேகமாக ஓடும் தன்மை உடையது. உடல் முழுவதும் பால் நிற வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அடி வயிறு, மூக்கு மற்றும் கண்களைச் சுற்றிலும் ரோஸ் நிறத்தில் இருக்கும்.

ராஜபாளையம் 
நாய்
ராஜபாளையம் நாய்

இவை அல்பினோ வகையை சேர்ந்தது .இந்த வகை  நாய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவை மூர்கமான காவல் காரன் வளர்த்தவர்களிடம் பாசமாவாவும் புதியவர்களிடம் கோபமாகவும் நடந்து கொள்ளும் இதற்கும் அதிகப்படியான கவனிப்புகள் தேவை 

மருதுபாண்டியர்கள் வளர்த்த கோம்பை

மருதுபாண்டியர்களின் கோட்டைக் காவலாக விளங்கிய கோம்பை, பார்ப்பதற்குச் `செந்நாய்’ போன்ற உருவ அமைப்புடையது.  வரலாற்றில் தனக்கென தனிஇடம்பெண்ண கோம்பை நாய்கள் தற்போது பல பகுதிகளில் தெரு நாய்கள் போல் பராமரிப்பு இல்லாமல் சுற்றிவருகிறது.

கோம்பை நாய்
கோம்பை நாய்

உடல் மண் சிவப்பு நிறத்தில் இருக்கும். கண், மூக்கு, வாய்ப்பகுதியில் கறுப்பு நிறத்தில் இருக்கும். நெற்றிப்பகுதி மேடு பள்ளமாகவும், வால் நன்கு சுருண்டும் காணப்படும். ராமநாதபுரத்து கோம்பை நாய் இதற்கு பல பெயர்கள் உள்ளன. கிடை நாய் ,கேதாரி நாய் , கோம்பை நாய்,சாம்பல் நாய் எல்லா பெயர்களுக்கு பின்னரும் ஒரு கதை உள்ளது. இந்த நாய்கள் சாம்பல் , பாலைமறை சாம்பல் (சாம்பல் மற்றும் வெள்ளை),கருசாம்பாள் , கருமரை (கருப்பு மற்றும் வெள்ளை), சேவலை மறை (சிவப்பு மற்றும் வெள்ளை ),கருப்பு ,வெள்ளை ,ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.

அன்புக்கு கட்டுப்படும் கன்னி நாய்

பொதுவாக மனிதர்களிடம் மிகவும் அன்பாக பழகக்கூடிய நாய்கள்.  கன்னி நாய் பார்ப்பதற்கு கறுப்பு நிறமாகவும் கால்கள் பிரவுன் நிறத்திலும் இருக்கும். நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் இருக்கும். எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும்.

கன்னி நாய்
கன்னி நாய்

இதன் உடல் அமைப்புதான் வேகமாக பாய்ந்து ஓடிச் செல்லவும், விலங்குளை விரட்டவும் உதவுகிறது. கன்னி நாய் வளர்க்கவேண்டும் என்றால் முதலில் சரியான இட வசதி இருந்தால் மட்டும்.என்றென்றால் இவை வேட்டை நாய்கள் கட்டி போட்டு வளர்தல் கூடாது. இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பொருமாள் படத்தில் கன்னி நாய்கள்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டத்தில் இவை மிஞ்ச ஆளில்லை சிப்பிப்பாறை 

உலகின் அதிவேகமாக ஓடக்கூடிய நாய்களில் ஒன்று சிப்பிப்பாறை. மனிதர்களுடன் பாசத்துடன் பழகும் இந்த சிப்பிப்பாறை நாய்கள் தனது எஜமான் ஒரு குரல் கொடுத்தால் உடனே ஓடிவந்துவிடும். சிப்பிப்பாறை நாய்களின் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது.

சிப்பிப்பாறை
சிப்பிப்பாறை

இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன.சிப்பிப்பாறை நாய்கள். முயல்களைவிட வேகமாக ஓடக்கூடியவை சிப்பிப்பாறை நாய்கள். அதாவதுமணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

கட்டை கால் அல்லது குட்டை கால் 

கட்டை கால் குட்டை கால் நாய்கள் அதன் சிறிய உருவத்தினால் அந்த பெயர்கள் வந்தன இதன் பிறப்பிடம் நாகப்பட்டினம் இன்றும் நாகப்பட்டினம் தஞ்சாவூர் காரைக்கால்  பகுதிகளில் இந்த நாய்கள் வளர்க்கப்படுகின்றன.இவை கோப குணம் கொண்ட  அதே போல பாசமும் அதிகமாக கொண்ட நாய்களாக இருக்கின்றன.

குட்டை கால் நாய்
குட்டை கால் நாய்

பொதுவாக இந்த வகை நாய்கள் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.இந்த வகை நாய்கள் வளர்க அதிகபடியான இடம் தேவை இல்லை .வீட்டின் உள்ளேயே போட்டு வளர்க்கலாம் .குறைவான கவனிப்பு இருந்தால் போதுமானது .    

இந்த நாய்கள் வீட்டு காவலுக்கு சிறந்தவை. வீட்டிற்குள் நுழய முயலும் எந்த ஒரு விஷ பூச்சிகளையும் நம்மிடம் அண்ட விடாது.பாம்புகள் கண்ணில் பட்டால் விடாது

இந்தியன் பரிய  நாய்கள் 

நீங்கள் நினைப்பது சரிதான் இது நம் தெரு நாய்கள் தான். இவையும் நம் நாட்டு நாய்களே இவை அணைத்து சீதஉஷ்ண நிலையிலும் வாழகூடியது இந்தியா  முழுவதும் சுமார் லட்சக்கணக்கான பரிய வகை நாய்கள் உள்ளது.

பாரி நாய் அல்லது தெரு நாய்
பாரி நாய் அல்லது தெரு நாய்

பொதுவாக இந்த தெரு நாய்களை யாரும் விருப்புவது இல்லை . சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டுமே இந்த பரிய நாய்களை எடுத்து வளக்கின்றனர். பல இடங்களில் இந்த நாய்களால் தொல்லை என கொள்ளவும் படுகின்றது.இந்த வகை நாய்கள் பல நிறங்களில் பல உயரங்களில் நம் தெருவில் சுற்றுவதை பார்ப்போம். எல்லா நாய்களுமே கண்டிப்பாக நன்றாக காவல் காக்கும். தைரியமாக இந்த நாய் குட்டி கிடைத்தால் எடுத்து வீட்டில் வைத்து வளக்க நினைப்பவர்கள் தளரமாக வளர்க்கலாம்.   

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com