அயர்ன் பாக்ஸ் துணியில் ஒட்டிக் கொள்கிறதா? 5 ரூபாய் செலவில் சரி செய்வது எப்படி?

Ironbox
Ironbox
Published on

நாம் எல்லோரும் காலையில் அவசர அவசரமாக ஆபீசுக்கோ அல்லது விசேஷத்துக்கோ கிளம்பிக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து நம்ம இஸ்திரி பெட்டி சதி பண்ணும். ஆசையாக எடுத்துப் போட்ட வெள்ளைச் சட்டையில், அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதியில் இருக்கும் கருகிய கறை ஒட்டிக்கொண்டு, அந்தச் சட்டையையே வீணாக்கிவிடும். 

சில சமயம் பாலியஸ்டர் துணிகள் சூடு தாங்காமல் உருகி, பெட்டியின் அடியில் ஒட்டிக்கொண்டு, பிசுபிசுவென ஆகிவிடும். "ஐயோ! அயர்ன் பாக்ஸ் போச்சே, இனி புதுசுதான் வாங்கணுமா?" என்று கவலைப்படத் தேவையில்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல், நம் வீட்டில் இருக்கும் சாதாரணப் பொருட்களை வைத்தே, பழைய அயர்ன் பாக்ஸை புத்தம் புதுசு போல மாற்றலாம். 

சிறந்த அயர்ன் பாக்ஸ் வாங்க...

காய்ச்சல் மாத்திரை செய்யும் மாயம்!

கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? ஆனால், இதுதான் நிஜம். நம் வீட்டில் காய்ச்சலுக்குப் பயன்படுத்தும் பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரை இருக்கிறதா? அது போதும்.

முதலில் அயர்ன் பாக்ஸை ஆன் செய்து, அதிகபட்ச சூட்டில் வையுங்கள். பெட்டி சூடானதும், ஒரு இடுக்கி அல்லது மரக்குச்சியின் உதவியுடன் அந்த மாத்திரையைப் பிடித்துக்கொண்டு, கறை உள்ள இடத்தில் மெதுவாகத் தேயுங்கள். கையில் சூடு படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

சூட்டில் அந்த மாத்திரை உருகி, ஜெல் போல மாறும். அந்த ஜெல், அயர்ன் பாக்ஸில் ஒட்டியிருக்கும் அழுக்கு மற்றும் கருகிய துகள்களை அப்படியே கரைத்துக்கொண்டு கீழே வழிந்துவிடும். பிறகு, ஒரு தடிமனான காட்டன் துணியால் துடைத்துவிட்டால், அடிப்பகுதி கண்ணாடி போல மின்னும்!

இதையும் படியுங்கள்:
வாய் துர்நாற்றமா? ஈறுகள் வீக்கமா? கிருமிகளை விரட்டும் உப்பு நீர் வழிமுறை!
Ironbox

உப்பும் பேப்பரும் போதும்!

மாத்திரை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு, இன்னொரு சூப்பர் வழி இருக்கிறது. இதற்குத் தேவை ஒரு பழைய நியூஸ் பேப்பர் மற்றும் கொஞ்சம் சமையல் உப்பு.

ஒரு நியூஸ் பேப்பரைத் தரையில் விரித்துக்கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு கைப்பிடி உப்பைத் தாராளமாகத் தூவி விடுங்கள். இப்போது அயர்ன் பாக்ஸை ஆன் செய்து, மிதமான சூட்டில் வையுங்கள். பெட்டி சூடானதும், அந்த உப்பின் மீது வைத்து, துணியை அயர்ன் செய்வது போல முன்னும் பின்னும் தேயுங்கள். 

உப்பு ஒரு 'ஸ்கிரப்பர்' போலச் செயல்பட்டு, அடியில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பு, அழுக்கு அனைத்தையும் சுரண்டி எடுத்துவிடும். கடைசியாகச் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு, துணியால் துடைத்தால் வேலை முடிந்தது.

பற்பசை: லேசான கறைகள் என்றால், அயர்ன் பாக்ஸ் சூடாக இல்லாதபோது, அதன் அடியில் கொஞ்சம் டூத் பேஸ்ட்டை தடவி, பழைய பிரஷ்ஷால் தேய்த்து, பின்னர் ஈரத்துணியால் துடைத்தாலே போதும்.

இதையும் படியுங்கள்:
கடலுக்கு அடியில் 1300 அடி ஆழத்தில் உலகிலேயே மிக ஆழமான சுரங்கப்பாதை!
Ironbox

மேலே சொன்ன முறைகள் எல்லாமே மிக மிகக் குறைவான செலவில், சில நிமிடங்களில் செய்யக்கூடியவை. பராமரிப்பு என்று வரும்போது பெரிய செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை, கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும்.

இன்றே உங்கள் வீட்டில் கறை படிந்த அயர்ன் பாக்ஸ் இருந்தால், இந்த முறைகளை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் துணிகளும் பாழாகாது, அயர்ன் பாக்ஸும் நீண்ட நாட்கள் உழைக்கும்.

சிறந்த அயர்ன் பாக்ஸ் வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com