
நம்மில் பலர் ஒரு நாளைத் தொடங்கும் போது அந்த நாள் எப்படிச் செல்ல வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமலேயே படுக்கையிலியிலிருந்து எழுந்து கொள்வோம். ஆனால் இப்படிச் செய்வது நம் நாளையும் நம்மையும் மேம்படுத்தாது. எனவே ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்கு முன்னர் இந்த நாள் எப்படிச் செல்ல வேண்டும் என்று திட்டமிடுவது நல்லது.
கையில் இருக்கும் பணத்தை வைத்து பார்ப்பதை எல்லாம் வாங்கும் பழக்கம் உங்களை நடு ரோடில் நிறுத்திவிடும். அது சிறிய செலவாக இருந்தாலும் பெரிய செலவாக இருந்தாலும் உங்களுக்கு உபயோகமானதா என்று பார்த்து பின்னர் முடிவெடுப்பது நல்லது.
சிறிய செலவுகள்
பல சமயங்களில் நாம் சில்லறையாக செலவு செய்வதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால் சிறிய செலவுகள் என்றாலும் பார்த்து செலவு செய்வது அவசியம்.
தவரானோருடன் பழக்கம்
நாம் யாருடன் இருக்கிறோம் என்பது நம் செலவு பழக்கங்களை நிர்ணயிக்கும். . உங்கள் கனவுகளை, பட்ஜெட் வாழ்க்கை முறையை அவமதிக்கும் நபர்களுடன் எப்போதும் நட்புறவை வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் கெட்டுப் போவதோடு உங்களையும் சேர்த்துக் கெடுப்பர்.
நிதி பொறுப்புகள்
உங்களுக்கு இருக்கும் நிதிப் பொறுப்புகளை தள்ளிப் போடக்கூடாது. எதிலாவது முதலீடு செய்ய நினைத்தீர்கள் என்றால், அதைத் தள்ளிப் போடாமல் உடனே அதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள்.
தனிப்பட்ட வளர்ச்சி
உங்களின் வளர்ச்சியை நீங்களே தடுக்கக் கூடாது. தினமும் ஒரே வேலையை செய்து கொண்டு, ஒரே வட்டத்திற்குள் ஓடிக் கொண்டிருந்தால், கண்டிப்பாக வளர முடியாது.
ரிஸ்க் எடுக்க பயப்படுவது
நாம் பிரச்னைகளை பார்த்து எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் முன்னேற முடியாது. நிதி நிலைமையும் இதனால் முன்னேற்றம் காணாமல் இருக்கும். எனவே கணக்கு போட்டு நீங்கள் சில இடையூறுகளை கட்டாயம் சந்திக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கத்தான் வேண்டும்.
உள் உணர்வு
வெற்றிக்கு முக்கிய காரணியாக விளங்குவது உள் உணர்வு. உங்கள் இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும். தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
வித்தியாசம்
நன்றாக இருக்கும் போது பெருமையும் அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி அமையாது. மோசமான நேரங்களில் யாரும் உதவ முன்வர மாட்டார்கள்.
செலவு
எந்த மனிதனும் பணத்தை சிந்தனையின்றிச் செலவிடக்கூடாது. கஷ்டமான நாட்களில் பணம் உதவியாக இருக்க வேண்டும். சேமிப்பு மிக முக்கியமானது.
பணம்
நீங்கள் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால் உங்கள் செயல்பாடுகளில் உன்னிப்பாக கவனம் செலுத்துங்கள். சரியான வழியில் சம்பாதிக்கும் பணமே தங்கும். ஒழுக்கக் கேடாக சம்பாதிக்கும் பணம் தங்காது.
உழைப்பு
கடினமான உழைப்பு ஒரு போதும் கைவிடாது. கடின உழைப்பால் கண்டிப்பாக நல்ல செல்வம் பெற முடியும்.
தானம்
பணத்தை தர்மம் செய்யலாம் ஆனால் அதிகப்படியான தானம் தீங்கு விளைவிக்கும். பணம் சம்பாதிப்பதுடன் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால்தான் பணக்காரராக முடியும்.