இரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

இரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
Published on

நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...

நன்கு காய்ச்சிய நீரில் இருந்து வெளிப்படும் நீராவியை ஆழமாக உள்ளிழுத்து சுவாசிப்பது மூக்கடைப்புக்கு நிவாரணம் தரும்.

சைனஸ் தலைவலி பாதிப்பில் இருந்து விடுபடவும் உதவும். சைனஸ் பிரச்சினையை எதிர்கொண்டவர்களுக்கு தொண்டை முழுவதும் சளி சவ்வுகள் படர்ந்திருக்கும். சூடான நீரை பருகுவது அந்த பகுதியை சூடாக்க உதவும்.

மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு சூடான நீர் நிவாரணம் தரும். அறை வெப்பநிலையை கொண்ட பானத்தை விட சூடான பானம் பருகுவது தொண்டைக்கு இதமளிக்கும்.

சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும் அதுபற்றி கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. அதேவேளையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குடல் இயக்க செயல்பாட்டிற்கு சூடான நீர் சாதகமாக அமைந்திருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சூடான நீராக இருந்தாலும், குளிர்ந்த நீராக இருந்தாலும் அதனை போதுமான அளவு பருகவேண்டும். பருகாவிட்டால் நரம்புமண்டல செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். மன நலன் மற்றும் மூளையின் செயல்பாடுகளிலும் பின்னடைவு ஏற்படும்.

எந்த வெப்பநிலை கொண்ட நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும்.

சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. உடலின் ஒவ்வொரு அத்தியாவசிய செயல்பாட்டுக்கும் தண்ணீர் தேவை.

பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம்.

உடற்பயிற்சி செய்பவர்கள் சூடான நீர் பருகுவது அவர்களது உடல் வெப்பநிலையையும் சீராக பராமரிக்க உதவுகிறது. மிதமான சுடுநீரில் குளிப்பது ரத்த ஓட்டம் துரிதமாக செயல்பட உதவும்.

தமனிகள், நரம்புகள் விரிவடைந்து உடல் முழுவதும் ரத்த ஓட்டம் செல்லும் திறனும் மேம்படும்.

இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

கொதித்த நீரை ஆறவைத்து பருகுவது, ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை நீர்த்துப்போகச் செய்யும். சிறுநீரகங்களையும் பாதுகாக்கும். மிகவும் சூடாக இருக்கும் தண்ணீரை பருகுவது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம்.

சுவை மொட்டுகளை சிதைக்கலாம், எனவே வெந்நீர் குடிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள்.

130 டிகிரி பாரன்ஹீட் முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலை சூடான பானங்களுக்கு ஏதுவானது. அதற்கு மேலும் வெப்பநிலை அதிகரித்தால் சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.

இரவில் வெந்நீர் குடிப்பது நல்லதா?

ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம்.

சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும்.

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.

வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது.

காலையும் இரவும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வாழ இதனை பின்பற்றுவோம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com