வீடுகளில் புறாக்கள் கூடுகட்டுவது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?

Pigeons nest
Pigeons nest

வீடுகளில் பொதுவாகவே புறா, சிட்டுக்குருவி போன்றவை கூடுகட்டுவது இயல்பான ஒன்றுதான். பெரும்பாலான விலங்குகள் மற்றும் பறவைகள் தெய்வங்களின் வாகனங்களாகக் கருதப்படுகின்றன. முருகனுக்கு மயில், சரஸ்வதி தேவிக்கு அன்னம், விஷ்ணுவுக்கு கருடன், சனி பகவானுக்கு காகம், தாயார் மகாலட்சுமிக்கு ஆந்தை என்பன அவர்களின் வாகனங்களாகக் கருதப்படுகின்றன. எனவே, பலரும் பறவைகள் மற்றும் விலங்குகளை, தெய்வங்களுடன் சேர்த்தே வழிபாடு செய்கின்றனர்.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில பறவைகள் வீட்டில் கூடு கட்டுவது அதிர்ஷ்டமாகவும், சில பறவைகள் கூடு கட்டுவது அமங்களமாகவும் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் வீட்டில் புறா கூடு கட்டினால் என்ன பலன் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புறாக்கள் தாயார் மகாலட்சுமிக்கு உகந்த பறவை என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, புறாக்கள் வீட்டிற்கு வருவதால், அது துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றுவதாகவே என்று கருதப்படுகின்றது. புறாக்கள் வசிக்கும் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் அமைதியும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும். எனவே, புறாக்களின் கூட்டை ஒருபோதும் அழிக்கவோ, புறாக்களை துரத்தவோ கூடாது. இது மகாலட்சுமியை அவமதிப்பதாக அமையும். பறவைகளின் வருகை வாழ்க்கையின் அதிர்ஷ்டம் அதிகரிக்கப்போவதையே குறிக்கிறது. புறாவிற்கு கூரைகளில் உணவளிக்காமல் வீட்டின் முற்றத்தில் உணவளிக்க வேண்டும். இது ராகு கிரக தோஷத்தை நீக்குகிறது. அதேநேரம் புறாக்களின் எச்சங்கள் சுத்தம் செய்யப்படாவிட்டால், ராகு கிரகத்தின் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே, அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!
Pigeons nest

வாஸ்துபடி, உங்கள் தலைக்கு மேல் புறா பறந்தால், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீர உள்ளது என்று அர்த்தம். வெளியே செல்லும்போது திடீரென உங்கள் வலது பக்கத்திலிருந்து புறா பறந்தால், அந்த நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அது துரதிர்ஷ்டம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல், வீடுகளில் புறா கூடு கட்டுவது பண வருவாய்க்கான அறிகுறி என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. புறா, மகாலட்சுமிக்கு உகந்த பறவையாகக் கருதப்படுகிறது. புறாக்களை அவமதிப்பது வீடு தேடி வந்த செல்வத்தை புறக்கணிப்பதை போன்றது.

அதனால்தான் வீடுகளில் புறா கூடு கட்டுவது மங்கலகரமானது என கருதப்படுகிறது. அதேபோல், புறா கூடு கட்டும் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் என்பது நம்பிக்கை. எனவே, புறா கூட்டை ஒரு போதும் கலைக்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com