குளவிகள் வீட்டில் கூடு கட்டுவது அதிர்ஷ்டமா?

குளவிக் கூடு
குளவிக் கூடுhttps://www.pestworldforkids.org
Published on

குளவிகள் பட்டாம்பூச்சி இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் கூட, இவை தேனியும் அல்ல எறும்பும் அல்ல. பயிர்களை சாப்பிடும் பூச்சிகளை இந்த குளவிகள் வேட்டையாடும். இவற்றை சுற்றுச்சூழல் மண்டலத்தின் நெருங்கிய நண்பன் என்று கூறுவார்கள். இவை துருவப் பிரதேசம் தவிர, உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. இதன் எடை ஒரு கிராமுக்கும் குறைவாகவே உள்ளது. இவை 12 முதல் 22 நாட்களே வாழ்கின்றன.

குளவி இனத்தில் நிறைய வகைகள் உண்டு. பெரும்பாலும் இவை ஒட்டுண்ணிகளாகவே உள்ளன. சில குளவிகள் தனியாகவும், சில கூட்டு சமூக வாழ்க்கையையும் நடத்துகின்றன. பெரும்பாலும் இவை கூடு கட்டுவதில்லை. ஆனால், சில குளவிகள் அழகாகக் கூட்டை அமைக்கின்றன. இவற்றுக்கு எறும்புகள் போலவே கூட்டு கண்கள் உண்டு.

குளவிகளின் இனம் மற்றும் இருக்கும் இடத்தைப் பொறுத்து கூடுகள் கட்டப்படுகின்றன. பொதுவாக, இவை மரத்திலோ, பொந்திலோ, தரையில் உள்ள பள்ளங்களிலோ தங்கள் கூட்டை அமைக்கின்றன. இவற்றிற்கு தேனீக்கள் போல மெழுகு சுரக்கும் சுரப்பி கிடையாது. இவை மரத்தின் கூழிலிருந்தும், சிதைந்துபோன மரங்களிலிருந்து மரத்தூளைக் கொண்டு வந்து அதன் பற்களால் கடித்து மென்மையாக்கி அதன் எச்சிலை நன்றாக கலந்து நிறைய அறைகள் உள்ள கூட்டை உருவாக்கும்.

கூட்டை முதலில் ராணி குளவிதான் கட்டத் துவங்கும். ஒரு கோதுமை அளவுக்குக் கூடு வந்ததும் வேலைக்கார குளவிகள் நிறைய அறைகளை அமைக்கும். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு முட்டை பத்திரமாக வைக்கப்படும். பின்பு அதன் வாயில் மூடப்பட்டு அடுக்குக்கு மேல் அடுக்காக கட்டி முட்டையை ராணி குளவி இடும். இவை தேன்கூட்டை போன்று அறுகோண வடிவில் அறைகள் கொண்டதாக இருக்கும். மூடப்படாத இந்தக் கூடு ஒன்று அல்லது இரண்டு முனைகளில் ஒட்டி இருக்கும்.

தேனீக்களைப் போலவே நிறைய வேலைக்கார குளவிகளும், ஆண் குளவிகளும் இருந்தாலும் ஒரே ஒரு ராணிக் குளவி மட்டும்தான் இருக்கும். குளவிகள் கொட்டினால் கடுமையாக வலிக்கும். குளவி அரக்குக்கூடு கட்டினால் ஆண் குழந்தையும், மண் கூடு கட்டினால் பெண் குழந்தையும் பிறக்கும் என்றும் கூறுவார்கள். குளவி வீட்டில் கூடு கட்டினால் அந்த வீட்டில் குழந்தை தவழப் போகிறது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். கர்ப்பிணிகள் உள்ள வீட்டில் குளவி கூடு கட்டினால் அதை கலைக்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்களது Shopping addictionனை உணர்த்தும் 8 அறிகுறிகளைத் தெரியுமா?
குளவிக் கூடு

பொதுவாக, அனைவரது வீட்டிலும் எறும்பு, பல்லி, ஈக்கள் போன்றவை காணப்படும். மழைக்காலங்களிலும், மாம்பழ சீசனிலும் ஈக்கள் அதிகம் காணப்படும். வெயில் காலத்தில் எறும்புகள் வீட்டில் அதிகம் ஊர்வதைக் காண முடியும். ஆனால், எல்லா இடங்களிலும் இல்லாமல் சில வீடுகளில் மட்டும் குளவிகள் கூடு கட்டுவதைப் பார்க்க முடியும். இப்படி குளவி கூடு கட்டுவது நல்ல அறிகுறியா என்று கேட்டால் நல்ல அறிகுறிதான் என்பது பதிலாக அமையும்.

பொதுவாக, குளவிகள் எல்லா இடத்திலும் கூடு கட்டுவதில்லை. அவை இனப்பெருக்கத்திற்காக மட்டுமே கூடுகளை உருவாக்குகின்றன. எனவே, இந்த கூடுகள் கட்டப்பட்ட வீடுகளில் திருமணம் ஆகாதவர்கள் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், மழலைச் செல்வம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவை கூடு கட்டுவதற்கு பயன்படுத்தும் மண்கள் மிகவும் தூய்மையானவை என்று சொல்லப்படுகிறது. வீட்டின் நிலை நன்றாக இருந்தால்தான் குளவிகள் கூடு கட்டும். வீட்டில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் வீட்டில் குளவி கூடுகள் கட்டப்பட்டிருந்தால் அந்த குடும்பத்தின் நிதி அம்சங்கள் சாதகமான முறையில் மாறும் என்றும் நம்பப்படுகிறது. கடன் கொடுத்திருந்தால் அந்தப் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகளும், கடன் வாங்கி இருந்தால் அவை திருப்பி செலுத்தக்கூடிய வகையில் நிலைமை மாறும் என்றும் கூறப்படுகிறது.

குளவிகள் இனப்பெருக்கம் செய்து கூட்டை காலி செய்ததும் அந்தக் கூட்டில் தண்ணீர் விட்டு பெயர்த்து ஒரு பேப்பரில் கட்டி தூக்கி எறிந்து விடுவது வழக்கம். சில வீடுகளில் குளவிகள் பூஜை அறையிலும், வீட்டு கதவின் மேற்பகுதியிலும் கூடு கட்டும். பூஜை அறையில் கூடு கட்ட ஐஸ்வர்யம் பெருகும் என்றும், கதவுகளின் மேற்பகுதியில் கூடுகள் அமைந்தால் வீட்டிலுள்ள உறுப்பினர்களின் ஆரோக்கியம் பெருகும், வளமான வாழ்வு உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com