நட்பு பிரிவதற்கு இதுதான் காரணங்களா?

friends
friendshttps://www.betterup.com

ம்மைச் சுற்றி  தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், சித்தப்பா, பெரியப்பா, மாமா போன்ற பல உறவுகள் உள்ளனர். இவை அனைத்தும் இரத்த சொந்தங்கள். ஆனால், எந்தவித தொடர்பும் எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்பிக்கை மட்டுமே அடித்தளமாகக் கொண்டிருப்பது நட்புதான். ஆம், உறவுகளிலேயே மிகவும் புனிதமானதும் நட்புதான். சொந்தங்கள் இன்றி ஒருவரால் வாழ முடியும். ஆனால் நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது.

நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில், ஒருவர் தாயிடம் கூட பகிர முடியாத தனது உணர்வுகளை, துன்பத்தை நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்று சும்மா சொல்லவில்லை. நமது வேதனைகளின்போது தனது தோளில் சாய்த்து ஆறுதல் தருவது நல்ல நண்பர் மட்டுமே.

ஏனெனில், எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும், நெருங்கிய உறவுகள் விட்டுச் சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்தக் கஷ்ட காலத்தில், அதனை போக்க முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார் . அத்தகையவர் மீது நிச்சயம் நமக்கு அவர் 'தனக்கு மட்டுமே சொந்தம்' என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம். இவ்வளவு உன்னத நட்புக்குள் பிரிவு வருமா? வந்தால் தாங்க முடியுமா?

உறவுகளில் பிரிவு இருப்பது என்பது சாதாரணமான விஷயம். ஆனால், எந்த ஒரு உறவிற்கும் இவ்வுலகில் பிரிவு இருந்தாலும், நட்புக்கு பிரிவு இருக்கவே இருக்காது என்று நினைக்கிறோம். உண்மையில் நட்பிலும் பிரிவு என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. ஆனால், நண்பர்களின் விரிசல்  வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஒருசில அறிகுறிகள் மூலமே தெரியவரும். ஏனெனில், நட்பில் இணைபவர்கள் எப்போதும் வேண்டுமென்றே பிரிய நினைப்பதில்லை. இதற்குப் பின்னால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் நம்மை விட்டு விலக நினைக்கிறார்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அது என்ன தெரியுமா?

எந்த நேரத்திலும் நம்முடன் மகிழ்ச்சியாக பேசி பொழுதைக் கழிப்பதை விரும்பிய நண்பன், திடீரென்று வேலை இருக்கிறது என்று அடிக்கடி சொல்லித் தவிர்த்தால் அவர் தம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் உண்மையில் வேலை இருக்கலாம். அதை சொல்லும் தொனியிலேயே உணர முடியும்.

இதுவரை நண்பனாக இருந்து, எப்போதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் நமக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசியவர்கள், திடீரென்று அதனை தவிர்த்து, வேறு நபருக்கோ அல்லது சம்பந்தமே இல்லாமல் நம்மை தவிர்த்து வேறு ஒன்றுக்கோ முக்கியத்துவம் கொடுத்தால், அதனைக் கொண்டும் அவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்ற எண்ணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தினம் தினம் வெவ்வேறு நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு கிடைத்துவிட்டால், இதுவரை எங்கு சென்றாலும் நம்மையும் அழைத்துச் செல்லும் நண்பன், நம்மைத் தவிர்த்து, அடிக்கடி புது நண்பர்களுடன் தனியாக செல்வதைக் கொண்டும், நம்மை விட்டுப் பிரிய நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உடனே விலக்க வேண்டிய பத்து விதமான சூழ்நிலைகள்!
friends

உறவுகளுக்குள் பெரும்பாலும் பிரச்னை ஏற்படுவதற்கு பொறாமையும் ஒரு காரணம். அதிலும் பெண்கள் மூலம் வரும் பொறாமை புனிதமான நட்புறவைக் கூட பிரித்துவிடும். ஆம், இதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு பெண் மீது கொண்ட அன்பால் ஒருவரை ஒருவர் வெறுத்து, பிரிந்து விடுகின்றனர்.

மேலும், வேறு ஏதாவது புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டாலும் பொறாமையானது ஏற்படும். இத்தகைய பொறாமை வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், அவர்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்களில் நன்கு புலப்படும். இதை வைத்தும் நட்பு முறியப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் தெரியும்போது அவசரப் பட்டு நண்பர்களை தவறாக நினைத்து பிரியாமல், அவர்களுடன் மனம் விட்டுப் பேசி கலந்து ஆலோசித்து அதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொண்டு, பின் எந்த முடியும் எடுப்பதே சிறந்த நட்பின் அடையாளம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com