அவசியம் கட்டணும் அரைஞாண் கயிறு!

அவசியம் கட்டணும் அரைஞாண் கயிறு!
Published on

ரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் ‘நீ என்ன கிராமத்தானா?’ என சற்று ஏளனமாகக் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல. இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.

இது மட்டுமா? பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்துக்குப் பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இதுபோலதான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை குறித்துக் காண்போம்.

நோய் தடுப்பு முறை: ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இதை இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும். பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90 சதவிகிதம் குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

உடல் எடை: உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகபட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் எனக் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை, ‘ஹெரணியா’ என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்கத்தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

கருப்பு கயிறு: ஆரம்ப காலத்தில் அரைஞாண் என்பது கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில்தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கம் என கட்டத் துவங்கினர்.

அரைஞாண் கயிறு நீக்கம்: சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறை நீக்கி விடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின்போது அரைஞாண் நீக்கப்படுகிறது.

அரைஞாண் பெயர் விளக்கம்: ‘ஞாண்’ என்றால் கயிறு அல்லது நூல் என்று பொருள். அரை என்பதற்கு பாதி என்று அர்த்தம். உடலில் பாதியில் அணிப்படுவதால் இது அரைஞாண் என்றானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com