'Jumped Deposit Scam' என்பது UPI பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் ஒரு புதிய மோசடி.
மொபைல் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்யும் அனைத்து பயனர்களும் (Phone Pe, Gpay, Paytm போன்ற இதர மொபைல் பண செயலிகள்) எச்சரிக்கையாக செயல் படவேண்டும்.
மோசடி செய்பவர், தனது எண்ணைப் பயன்படுத்தி உங்கள் தொலைபேசியில் உங்களுக்கு ரூபாய் 5000/- போன்ற சிறிய தொகையையோ அல்லது எதாவது ஒரு தொகையையோ உண்மையாக அனுப்புவார். இது போலி கிடையாது. ஒருவரும் சந்தேகப்படமாட்டார்கள். தவிர கவர்ச்சிகரமான சலுகைகள், கேஷ்பேக் என்றெல்லாம் ஆசை காட்டி UPI பின்னை உபயோகப்படுத்த வைப்பார்கள்.
உங்கள் தொலைபேசியில் சிறிது பணம் பெற்றதாக செய்தி வரும்போது, முதலில் உற்சாகப்பட்டு, பின்னர் இருப்பை உடனே சரிபார்க்க விரும்பும்போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. இருப்பைச் சரிபார்க்க, பின் எண்ணை போடுகையில், உங்கள் கணக்கில் அவரது பணம் எடுக்கும் கோரிக்கையை நீங்கள் சரிபார்த்துவிட்டதால், தானாகவே பணம் எடுக்கும் கோரிக்கையை அனுமதித்து பணத்தை எடுக்கும்.
இதன் தந்திரம் என்னவென்றால், ஆரம்பத்தில் ஒரு சிறிய தொகையைக் கொடுத்து ஏமாற்றி, உங்களிடமிருந்து பெரும் தொகையை "ஸ்வாகா" (திருடு) செய்து விடுவார்கள்.
இதை சாமர்த்தியமாக தவிர்க்க வேண்டும். எப்படியென்றால், எதிர்பாராத டெபாசிட் பெறும்போதெல்லாம், இருப்பைச் சரிபார்க்க, இந்த மோசடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, முதலில் வேண்டுமென்றே தவறான பின் எண்ணைப் போடவேண்டும்.
இது எந்தவொரு பணத்தையும் திரும்பப் பெறும் கோரிக்கைகளையும் ரத்து செய்யும். பிறகு, உண்மையான பின் எண்ணைப் போட்டு உங்கள் இருப்பைச் சரி பார்க்கலாம்.
புதிய மின்னணு பணப் பரிமாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது. நம்மிடமிருந்து திருட புதுப்புது முறைகளை கையாளும் மோசடி செய்பவர்களால் நாம் ஏமாறாமல் இருக்க, முதலில் தவறான பின் எண்ணைப் போடும் வழக்கத்தை கையாள்வது அவசியம்.
ஜம்ப்ட் டெபாஸிட்டிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிகள்:-
அங்கீகரிக்கப்படாத நபர்களிடம், UPI எண்ணை பகிர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
பரிவர்த்தனை செய்வதற்கு முன்பு, ஒரு முறைக்கு இரு முறை செக் செய்வது அவசியம்.
சந்தேகத்திற்குரிய செயலிகள், இணைப்புக்களை பயன்படுத்தக்கூடாது.
பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரியதாக இருக்கும் பொருட்டு, வங்கியைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற தகவல்களை குடும்பத்தினர், சக ஊழியர்கள், மற்றும் மிகவும் தெரிந்தவர்களிடையே பகிர்ந்து கொள்வதின் மூலம், அவர்களும் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
எதிலும், எப்போதும் முன்னெச்சரிக்கை தேவை!. காலம் மாறிப் போச்சு.