இதில் ஒன்றை செய்தாலே போதும்; கொசுத்தொல்லை இனி இல்லை!

இதில் ஒன்றை செய்தாலே போதும்; கொசுத்தொல்லை இனி இல்லை!

கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ஆரோக்யத்திற்கும் கேடு விளைவிக்கிறது. மலேரியா, டெங்கு போன்ற நோய்களோடு தற்போது வைரஸ் நோயாகவும் மாறி உடல்வலி, அதிக காய்ச்சல் என பல உபாதைகளை கொடுத்து விடுகிறது.

இதை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிதாக கொசுவை விரட்டி விடலாம். பகலில் கடிக்கும் கொசுக்களாலும் ஆபத்தை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

வேப்ப எண்ணெய் கொசுக்களை விரட்ட எளிய தீர்வு. இதன் நெடிக்கு கொசு மட்டுமின்றி பல பூச்சிகளின் நடமாட்டத்தையும் ஒழிக்கும். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெய் கலந்து கை, கால்கள் என சிறிதாக தடவிக் கொள்ள கொசு கடியிலிருந்து தப்ப உதவுவதோடு மீண்டும் வராமலும் இருக்க உதவும்.

ஜன்னல், மர கதவு ஓரங்களில் இந்த எண்ணெயை பிரஷ் கொண்டு தடவி விட்டு பின் மாலை நேரங்களில் கதவை சாத்தி வைக்க கொசு வராது.

கற்பூரத்திற்கு கொசு போன்ற பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. கற்பூரத்தை எரிய விட்டாலோ, கற்பூரத்தை மண்ணெண்ணெய் சேர்த்து வீட்டில் தெளித்து விட்டாலோ கொசு அண்டவே அண்டாது. கற்பூரத்தை எரிக்கும் மின்னணு கொசு விரட்டியையும் உபயோகிக்கலாம்.

லெமன் கிராஸ் : லெமன் கிராஸ் செடியையும், அதன் சாறையும் கொசுக்களை விரட்ட உபயோகிக்கலாம். இது பெரும்பாலும் கொசு விரட்டி சுருள்கள், திரவங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ரோஸ்மேரி : இந்த செடியும் கொசு விரட்டியாக செயல்படக் கூடியது. இது பெரும்பாலும் மசாலா பொருளாகவும், மூலிகையாகும் பயன்தரும் கூடியது. ரோஸ்மெரி செடியை அலங்காரச் செடியாக வீட்டினுள் வளர்க்க ஏற்றது. சமையலறையில் வைத்து வளர்த்தால் கொசு என்பதே இருக்காது.

பூண்டு : கொசுக்களை விரட்ட பூண்டு, வெங்காயச் செடியை வளர்க்கலாம். இதிலிருந்து வரும் நெடிக்கு கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வராது.

புதினா சாறு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அதை கொசு உற்பத்தியாகும் இடங்களில் தெளிக்க கொசு மட்டுப்படும்.

வீட்டினுள் வாசனை எண்ணெய்கள் ஊற்றிய விளக்கை ஏற்றலாம். சென்டட் கேண்டிலையையும் ஏற்றி வைக்க கொசுத் தொல்லை இருக்காது.

படுக்கும் போது கொசு வலை உபயோகிக்கலாம். ஜன்னல்களுக்கு வலை போட்டுவிட திறந்திருந்தாலும் கொசு போன்ற பூச்சிகள் வராது.

வீட்டினுள் தேவையில்லாத பொருட்களை அகற்றினாலே பூச்சிகள் வராது. ரெகுலராக வீட்டை தூய்மைப்படுத்திக் கொள்ள பூச்சிகளின் தொல்லை இருக்காது.

வீட்டின் வெளி சாக்கடை வழிகள் மற்றும் வீட்டில் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசு வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com