சமையலறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்கள்!

சமையலறை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்கள்!

மையல் அறையின் அளவு சிறியதோ பெரியதோ அதை மிகச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும். காலை நேரத்து அவசரமும் பரபரப்பும் தவிர்க்க முடியாது. புயலுக்குப் பின் அமைதி என்பது போல அதற்குப் பின் உடனுக்கு உடன் சீர் செய்துவிட வேண்டும். ஒரு வீட்டில் அதிக பாதுகாப்பு தேவைப்படும் இடமும் கிச்சன்தான்.

செய்யக் கூடாதவை

* மையலை வேகமாக செய்யும் போது சில சமயம் கவனக் குறைவு ஏற்படலாம். பொறுமை தேவை. அதற்குரிய நேரத்தோடு நிதானமாக செய்ய வேண்டும்.

சமையல் பொருட்களில் ஆரம்பித்து எரிவாயு பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

* காய்கறிகளை வேகமாக நறுக்கி விரல்களில் ரத்தக் காயம் ஏற்படுத்திக் கொள்ளவதைத் தவிர்க்கலாம்.

* கைக்குழந்தைகளை சமையலறையில் இடுப்பில் வைத்துக் கொண்டே சமைக்க வேண்டாம். அரிவாள்மனை, கத்தி போன்ற வற்றை அவர்கள் விளையாட்டாக எடுத்து விடலாம்.

*சூடான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பிலிருந்து வேகமாக இறக்கக் கூடாது. கை வழுக்கி மேலே விழுந்து விடலாம்.

*டுப்பில் எதையாவது கிண்டும் போது,  அருகில் நின்று கிண்ட வேண்டாம்.  சமைக்கும் போதோ கொதிக்க வைக்கும் போதோ, தெளிந்து விடும் அபாயம் உள்ளது.

*கொதிக்கும் நீர் அல்லது எண்ணெயினால் உடல் பகுதிகளில் பட்டுவிட்டால் கொப்புளங்கள் ஏற்படலாம். உஷார்!

*த்திகளைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். மழுங்கிய முனைகளுடைய கத்தி அடிக்கடி வழுக்கி, காயங்களை ஏற்படுத்தும். கூர்மையான கத்தியையே எப்போதும் பயன்படுத்த வேண்டும் . 

*சூடான பாத்திரங்களைத் தூக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  எவ்வளவு எடையை சுலபமாகத் தூக்க முடியும் என்பது  தெரிந்திருக்க வேண்டும். அடுப்பிலிருந்து சில பெரிய  பாத்திரங்களை இறக்க சிரமமாக இருந்தால், கணவர் அல்லது மகன் உதவியை நாடலாம். இல்லை யெனில் அதில் உள்ளவற்றை சிறிது சிறிதாக வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதன் பின் எடை குறைந்ததும் இறக்கி வைக்கலாம்.

* வி பறக்கும் உணவுகளைக் கையாளும் போது அதிக கவனம் தேவை. கொதிக்கும் உணவு மேலே பட்டால் எவ்வளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு காயம், உணவின் ஆவி முகத்தில் அடிக்கும் போதும் ஏற்படும்.

செய்ய வேண்டியவை

*‘சுத்தம் சோறு போடும்’ என்று சும்மாவா நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றார்கள்? ஆரோக்கியத்துடன் வாழ சத்தான உணவுகளை

சாப்பிட்டால் மட்டும் போதாது. அவை தயாரிக்கப் படும் சமையல் அறையும்  சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உன் சமையல் அறை யில் நான் உப்பா சர்க்கரையா என்று பாடுவதற்குப் பதில் பாக்டீரியாவா நோய்க் கிருமிகளா என்று கேட்கும்படி ஆகிவிடும்.

*மையலறையில்தான் அதிக அளவில் கிருமிகளும், பாக்டீரியாக்களும் குடிகொண்டிருக்கின்றன. கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம்மை அறியாமலேயே உணவைத் தாக்கு கின்றன. இதனால் வயிற்றுப் பிரச்னை கள், வாந்தி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க சமையல் அறையை கிருமிகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்

*மையல் அறையில் அதிக ஈரப்பதம் இருப்பது தான் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் வளரக் காரணம். சமையல் மேடையைத் துடைக்கப் பயன்படுத்தும் துணி எப் போதும் ஈரமாகவே இருக்கும். அதுவே பாக்டீரியா குடிகொள்ள காரணமாக உள்ளது. இதைத் தவிர்க்க வேண்டும். உலர்வான துணிகள்தான் மேடையில் இருக்க வேண்டும். அடுப்பு துடைக்கும் துணி, கைப்பிடித் துணிகளை அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி துவைத்து வெயிலில் காய வைத்துவிட வேண்டும்.  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பழையதுணிகளை அகற்றி விட்டு புது துணிகளைப் பயன்படுத்தலாம்.

*தூசி, அழுக்கு, காய்கறிக் குப்பைகள், எண்ணெய்ப் பிசுக்குகள், ஆகியவற்றை சுத்தம் செய்தால் போதும் என்று நினைப்போம். ஆனால் அது வெளிப் புற சுத்தம் மட்டுமே. சுகாதாரமாக இருக்க வேண்டும். சிலர் மூடி வைத்த குப்பைக் கூடைக் களைப் பயன் படுத்துவார்கள். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை தான் குப்பையையே வெளியே கொட்டு வார்கள். இது தவறு. உடனுக்குடன் குப்பைகளை வெளி யேற்றிவிட வேண்டும்.

*மையலறையில் உள்ள சிங்க்கை தினமும் சுத்தம் செய்யவேண்டும். சமையல் செய்த பாத்திரங் களில் இருக்கும் உணவுகள் சிங்கின் பைப்பில் தேங்கி விடாமல் நன்றாக சுத்தம் செய்து, சிங்க் பயன் பாட்டில் இல்லாத சமயம் உலர்வாக வைத்திருக்க வேண்டும். சமையல றையின் தரையும் கிருமி நாசினி கொண்டு தினமும் துடைப்பது நல்லது.

சமையல் அறை வாஸ்து

மையல் அறை தென்கிழக்கு திசையில்  இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. பஞ்ச பூதங்களில் ஓன்றான நெருப்பை தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் அமைப்பதே நன்மை தரும். சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமைக்க வேண்டும். தவறான இடத்தில் உள்ள

சமையல் அறை உடல் நலக்கேடு, பண விஷயத்தில் தொல்லை கொடுக்கும். தென்கிழக்கு மூலையில் கிணறு இருக்கக் கூடாது. தவிர டேப் அல்லது நீர் செல்ல பாதை என்று எதுவும் அமைக்கப்பட்டிருக்கக் கூடாது, அப்படி இருந்தால் இல்லத்தரசிக்கு உடல் நலக் கேடு வரும் என்று மனையடி சாஸ்திரம் தெரிவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com