
ஆடைகளில் பல வகைகள் உள்ளன. நிறங்களுக்காக சில வகை ஆடைகளில் சாயம் பூசப்படும். இந்த சாயம் துவைக்க துவைக்க மறைந்துவிடும். அது அப்படியே போனால் பரவாயில்லை. மற்ற ஆடைகளில் நிறம் ஒட்டி விடும் என்பதலாயே மக்கள் பயப்படுவார்கள்.
ஆனாலும் எந்த ஆடையில் சாயம் பூசப்பட்டிருக்கும் என்று எடுத்தவுடன் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஒரு முறை துவைத்தால் மட்டுமே தெரியும். அப்படி துவைக்கும் போது அது மற்ற ஆடைகளில் ஒட்டிவிடும். சில நேரங்களில் துணிகளில் சாயம் படிந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு வீணாகி விடும். அந்த சாயக் கறைகளை எளிதில் எப்படி நீக்குவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கலர் சட்டையுடன் வெள்ளை சட்டையை சேர்த்து ஊற வைக்கும்போது, வெள்ளை சட்டையிலும் சாயம் ஒட்டும். இதற்காக, ஒரு பக்கெட்டில் கால் பாக்கெட் அளவுக்கு சலவை பொடி சேர்த்து, அதனுடன் அரை மூடி வினிகரைச் சேர்க்க வேண்டும். அதனுடன் 3 மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
நல்ல நுரை வரும்வரை மிக்ஸ் பண்ணி விடவும். சாயம் பிடித்த சட்டையை இதில் அரை மணி நேரம் ஊற விடலாம். ஊறிய பிறகு, துவைக்க ஆரம்பிக்கலாம். துவைக்கும் போது, எவ்வளவு முடியுமோ அதளவுக்கு பிரஷ் போட்டு கையால் அடித்து நன்றாக துவைக்கவும்.
இப்படி செய்தால், சாயம் சட்டையிலிருந்து போகும். சட்டையில் ஒட்டிய சாயம் மெதுவாகவே போகும். துணிக்கு எந்த பாதிப்பும் வராது, ஆனால் அதில் உள்ள சாயம் மட்டும் போய்விடும். சாதாரணமாக தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளலாம். இதனை 3 தடவைகள் செய்ய வேண்டும். நன்றாக அலசிய பிறகு, வெயிலில் காய வையுங்கள்.
இதை ஏற்கனவே சாயம் ஒட்டி வீணாகிவிட்ட என ஓரமாக வைத்த ஆடையில் டெஸ்ட் செய்து பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இனி ட்ரெஸ்ஸில் சாயம் ஒட்டி வீணாகிவிட்டால் தூக்கி போட தேவையில்லை. இந்த டிப்ஸை அனைவருக்கும் பகிர்ந்து பயன்பெறுங்கள்.