வீட்டுத் தோட்டமும் அதன் பராமரிப்பும் தெரியுமா?

Interior gardening ideas
Indoor gardening ideasImage Credits: Storables
Published on

ங்களுக்குத் தோட்டம் வைத்து செடி, கொடிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் போதிய இட வசதியில்லையா? அதனால் என்ன வீட்டிற்குள்ளேயே தோட்டம் வளர்க்கலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

வீட்டிற்குள்ளே தோட்டம் அமைக்க முதலில் பார்க்க வேண்டியது இடம். இதற்கென்று தனி இடம் ஒதுக்கலாம் அல்லது சமையலறை, ஹால் போன்ற இடங்களில் செடிகளை வைத்து பராமரிக்கலாம். அதற்கு முக்கியத் தேவை சூரிய ஒளி சரியாக செடிகளுக்கு கிடைக்கிறதா? என்பதுதான்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, என்ன வகையான செடிகளை வீட்டினுள்ளே வைப்பது என்பதைத்தான். Lettuce, arugula, rosemary, mint போன்ற செடிகள் வீட்டினுள் வளர்ப்பதற்கு சுலபமாகும். அதனால் இந்தச் செடிகளில் இருந்து தொடங்குவது சிறந்தது. சிலர் தங்களுக்குத் தேவையான மற்றும் பயன் தரக்கூடிய மூலிகைச்செடி அல்லது காய்கறிகளை மட்டுமே வளர்ப்பார்கள். சிலர் அழகுக்காகவும், மன நிம்மதிக்காகவும் செடிகளைப் பராமரிக்க விரும்புவார்கள்.

சில செடிகள் தண்ணீரை விரும்பக்கூடியது. இன்னும் சில செடிகளுக்கு அவ்வப்போது நீர் ஊற்றினால் போதுமானது. செடிகளுக்கு அதிகமாக நீர் ஊற்றிக்கொண்டேயிருப்பது சிறந்ததில்லை. செடிகள் அழுகி வீணாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செடிகளுக்கு மிகவும் முக்கியமானது, எந்த மாதிரியான மண் பயன்படுத்துகிறோம் என்பதுதான். மண்ணில் தண்ணீருடன் உரத்தை கலந்து தெளிப்பது மிகவும் அவசியமாகும்.

ஹைட்ரோபோனிக் (Hydroponic) முறையில் மண்ணை பயன்படுத்துவதில்லை. இந்த முறை சிறிய இடமே உள்ளவர்களுக்கு வெகுவாகப் பயன்படும். இந்த முறையின் மூலம் செடிகள் 3 மடங்கு வேகமாகவும், பெரிதாகவும் வளரும்.

தோட்டத்தை அமைக்கும்போது தெற்கு பக்கம் பார்த்து அமைத்தால் நாள் முழுவதும் சூரிய ஒளி கிடைக்கும். இதுவே மேற்கு பார்த்து அமைத்தால் சாயங்காலம் சூரிய ஒளி கிடைக்கும். கிழக்கு பக்கமாக அமைத்தால் காலையில் சூரிய ஒளி கிடைக்கும்.

Vertical gardens: Vertical gardens பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் அதிக இடத்தை சேமிக்கலாம். இந்த வகை Garden சுவற்றில் ஏறக்கூடிய செடி. கொடிகளுக்கு சிறந்ததாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டை அழகாக்க இந்த 6 டிப்ஸ்களை பின்பற்றலாமே!
Interior gardening ideas

Terrarium: Terrarium என்பது ஒரு சிறிய Miniature தோட்டம். இதை கண்ணாடி குடுவையில் வைத்து பராமரிப்பார்கள். இதுபோன்ற Terrariumல் வளர்க்கக்கூடிய செடிகள் ஈரப்பதத்தை சுற்றுப்புறத்தில் இருந்து உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை கொண்டது.

Container: இது நிறைய பேர் வீடுகளில் பயன்படுத்தும் முறைதான். வீட்டிலேயே கன்டெயினர், பானை போன்றவற்றில் செடிகளை பராமரித்து வளர்க்கும் முறையாகும். Fern, lilies, spider plant போன்ற செடிகளை வளர்க்கலாம். இந்த முறைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டை ஒரு சோலைவனமாக மாற்றலாம். வீட்டில் தோட்டம் அமைப்பது இயற்கையின் மணத்தையும், அமைதியையும் கொடுக்கும். நீங்களும் முயற்சித்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com