எவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் தெரியுமா?

Know who to be wary of?
Know who to be wary of?https://www.herzindagi.com
Published on

‘அவரிடம் அதிகம் பேசாதீங்க, இவரிடம் ரொம்ப ஜாக்கிரதையா பழகுங்க’ என்றெல்லாம் நம் நலம் விரும்பிகள் சிலரிடம் சொல்வதுண்டு. அந்தக் காலம் போல இப்போது யாரிடமும் நேர்மையாகப் பழக முடியவில்லை என்பது உண்மையே. எப்படிப்பட்ட மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. நம்புவது போலவே பொய் பேசுபவர்கள்: அவர் பேசியது பொய் என்று நாம் நிரூபித்தாலும், தான் சொன்ன பொய்யை மறைக்க வேறொரு பொய் சொல்லி நம்ப வைக்க முயற்சிப்பவர்களை விலக்கி விடுங்கள். யாரை வேண்டுமானாலும் நம்பலாம். பொய் பேசுபவர்களை கண்டிப்பாக நம்பி விடாதீர்கள். சமயத்தில் காலை வாரி விடுவார்கள்.

2. பணத்தை மட்டும் மதிப்பவர்கள்: பணம், பதவி, செல்வாக்கு, அந்தஸ்துக்காக மட்டும் நம்மை போலியாக கொண்டாடுபவர்களை அலட்சியம் செய்யுங்கள். அவர்கள் காரியம் ஆகும் வரை மட்டுமே நமது சேவை அவர்களுக்குத் தேவையாக இருக்கும்.

3. அதிக மரியாதை தருபவர்கள்: காரணமே இன்றி நம்மைக் கண்டவுடன் முதுகு வளைத்து மிகையான மரியாதை தருபவர்கள் நம் முதுகின் பின் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். மரியாதை என்பது நமது செயல்களால் அவர்கள் மனதிலிருந்து வர வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

4. ‘ஆஹா ஒஹோ’ எனப் புகழ்பவர்கள்: நம்மைப் பற்றி முழுமையாக அறியாமலேயே நம் காதுகளே வலிக்கும் அளவுக்கு ஓவராக புகழ்பவர்கள், சட்டென்று மாறி நம்மை இகழ்ந்தும் செல்வார்கள். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

5. கடன் வாங்கித் திருப்பித் தராதவர்கள்: அவசரம் என்று கைமாத்து வாங்கிச் சென்று அதைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பவர்களை நம்பவே வேண்டாம். வாங்கிய கடனை திருப்பிக் கேட்கும் நம்மையே குற்றவாளி ஆக்கி விடுவார்கள். கடனுக்காக மட்டுமே நம்மைத் தேடி வருபவர்களை வாசலிலேயே நிறுத்துங்கள்.

6. அளவுக்கு அதிகமாகப் பேசுபவர்கள்: நாம் பேச வாய்ப்புத் தராமல் அவர்கள் மட்டுமே வாய் ஓயாமல் பேசுபவர்களால் நமது நேரமும் எண்ணமும்தான் சோர்வாகும். அதிகமாகப் பேசுபவர்களால் ஆபத்துதான் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
நைட் டைம்ல அதிகமா மொபைல் யூஸ் பண்றீங்களா? அச்சச்சோ! போச்சு!
Know who to be wary of?

7. தற்பெருமை புகழ்ச்சியாளர்கள்: தங்கள் செயல்கள் மற்றும் தங்களைப் பற்றி மட்டுமே தற்பெருமை பொங்க பேசுபவர்கள் நம்பகத் தகுந்தவர் அல்ல. தற்பெருமை தலைக்கனத்தைத் தரும் ஒரு விஷயம். நாம் அவர்களை புகழவில்லை எனில் விரைவில் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

8. நமது அழைப்பை மதிக்காதவர்கள்: தனக்குத் தேவையானபோது அடிக்கொரு தரம் செல்போனில் அழைப்பவர்கள் நமக்கு ஒன்று என்று அழைக்கும்போது செல்போனை எடுத்து பேசாதவர்கள். தொடர்ந்து முயற்சி செய்தாலும் சாக்கு சொல்லி பேச மறுப்பவர்கள் நிச்சயம் சமயத்தில் உதவ மாட்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com