மகிழ்ச்சியான வாழ்வு தரும் குங்குமம்!

மகிழ்ச்சியான வாழ்வு தரும்  குங்குமம்!

நம் எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக குங்குமம் இருக்கும். குங்குமம் இல்லாத வீடு கடவுள் இல்லாத கோவிலை போல என்று கூறுவார்கள். இந்த குங்குமத்தை வீட்டில் எப்பொழுதும் வைத்திருந்தால் மட்டும் போதாது! இப்படி செய்து வரும் பொழுது சேமித்த பணம் கரையாமல் மென்மேலும் பணம் சேரும் என்பது ஐதீகம். அது மட்டும் அல்லாமல் பெண்கள் கையில் பணம் புழங்கவும் இந்த விஷயம் தான் காரணமாம், அது என்ன? என்பதையும் தெரிந்து கொள்வோம்.

பணம் சேர எப்பொழுதும் நேர்மறையான சிந்தனைகள் தேவை! அதிக அளவு பணம் புழங்கும் இடங்களில் நேர்மறை ஆற்றல்கள் மட்டும் அல்லாமல், பணம் யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் நேர்மறையான சிந்தனைகளும் அதிகம் இருப்பதை கவனித்து பாருங்கள். அவர்களிடம் எப்பொழுதும் ஒரு விதமான புன்னகையும், மகிழ்ச்சியும் ஒளிந்து கொண்டு இருக்கும். அழுது வடிபவர்களிடம் பணம் சேராதாம். எப்பொழுதும் மகிழ்ச்சியாக எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் தன்னம்பிக்கையாக எதிர்கொள்பவர்களிடத்தில் பணம் சேர்ந்து கொண்டே இருக்குமாம்.

வீட்டில் குங்குமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குங்குமம் கரைய கரைய பணமும் கரையும் என்கிற ஒரு நம்பிக்கை உண்டு. இதனால் குங்குமம் எப்பொழுதும் நிறைவாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் மட்டும் அல்லாமல் படுக்கை அறையிலும் குங்குமத்தை பெண்கள் வைத்திருக்க வேண்டும். தாழம்பூ குங்குமம் அல்லது வாசனை மிகுந்த பல்வேறு மூலிகை குங்குமங்கள் வீட்டின் படுக்கை அறையில் வைத்திருக்க பண வரவு சிறப்பாக இருக்குமாம்! அது மட்டும் அல்லாமல் பெண்கள் வாசனை மிகுந்த இந்த குங்குமத்தை தினமும் நெற்றியின் வகிட்டில் இட்டுக் கொள்ள வேண்டும்.

திருமணமான பெண்களின் நெற்றியின் வகிடு, நெற்றி பகுதி மற்றும் திருமாங்கல்யத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை உண்டு. அதனால் தான் இந்த மூன்று பகுதியிலும் குங்குமத்தை வைக்க சொல்லி நம் முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குங்குமம் வைப்பதால் பெண்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த இல்லத்தில் பெண்கள் ஆட்சி செய்யும் பொழுது பணம் கரையாமல் சேமிப்பு அதிகரிக்கும். கிழக்கு நோக்கி தினமும் நின்று குளித்து முடித்த பிறகு வாசனை மிகுந்த மூலிகை குங்குமத்தை மனதார இறைவனை நினைத்து அல்லது கணவனை நினைத்து கொஞ்சம் போல் இட்டுக் கொள்ளுங்கள்.

முந்தைய காலங்களில் பெண்கள் வகிட்டில் நிறைய குங்குமம் வைப்பார்கள். வடநாட்டு பெண்கள் இன்றும் கூட நிறைய குங்குமம் வைப்பதை பார்த்திருப்போம். இப்படி அதிகமாக எடுத்து வைப்பதால் பணம் கரையாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. நம்முடைய கலாச்சாரத்திலும் இப்படி நிறைய குங்குமத்தை அள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது சாஸ்திரத்திற்கு சிறிதளவு அளவிற்காக வைத்துக் கொள்கிறார்கள் அவ்வளவு தான். வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுக்க தனித்தனியாக சிறிய பொட்டலத்தில் குங்குமத்தை மடித்து வைத்திருக்க வேண்டும். குங்குமத்தை கொடுப்பவர் முதலில் குங்குமத்தை வைத்துக் கொண்டு பிறகு வீட்டிற்கு வந்த விருந்தாளியிடம் குங்குமத்தை வைத்துக் கொள்ளுமாறு கொடுக்க வேண்டும். இதனால் வாங்குபவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் மாங்கல்ய பலம் நீடிக்கும்.

இந்த வகிட்டு பகுதியை சீமந்த பிரதேசம் என்று அழைப்பார்கள். எனவே திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியத்தில் தடை இருந்தால் தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் தாழம்பூ குங்குமம் வாங்கி வைத்து வாருங்கள், சீக்கிரமே பிள்ளை பேறு உண்டாகும். பெண்கள் மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் ஆண்களும் இரு புருவம் மத்தியில் தினமும் குங்குமம் இட்டுக் கொள்வதால் அவர்களிடமும் பணம் அதிகம் புழங்கும், மேலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. பணம் வைத்துக் கொள்ளும் மணி பர்சிலும் குங்குமம் ஒரு பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள் எப்பொழுதும் பணம் சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com