கோடைக்காலத்தில் ஏ.சி. க்களின் விற்பனை மிகவும் அதிகரித்து வருவதைப் போல கழுத்தில் மாட்டக்கூடிய மின்விசிறிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அவற்றின் பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
கழுத்து விசிறிகள் (Neck Fans):
1. கழுத்து விசிறிகள் இலகு ரக மற்றும் அணியக்கூடியவை. யு வடிவ அல்லது வட்ட காலர் வடிவத்தில் வருகின்றன. அவை அணிபவரின் கழுத்தில் வசதியாக தொங்குகின்றன. கழுத்து மற்றும் முகத்தை குளிர்விக்கப் பயன்படுகிறது. இவை பேட்டரியில் இயங்குகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால் நெக் ஃபேன்கள் சராசரியாக இரண்டு முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும்.
2. இவற்றை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லலாம். தனிப்பட்ட குளிரூட்டும் வசதி தருகிறது. எங்கு சென்றாலும், பயணம் செய்தாலும், வேலை செய்தாலும் அல்லது வெளியில் உடற்பயிற்சி செய்தாலும், அவற்றை எளிதாக எடுத்துச் செல்லலாம். முகம் அல்லது கழுத்து போன்று தங்களுக்கு மிகவும் தேவைப்படும் இடத்தில் நேரடியாக காற்றை வீசும் வகையில் சரி செய்து கொள்ளலாம். இது வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
3. பராமரிக்க மற்றும் பயன்படுத்த எளிதானது. ஸ்மார்ட் போன்கள் மற்றும் பல சாதனைகளைப் போலவே USB கேபிளைப் பயன்படுத்தி அவற்றை ரீசார்ஜ் செய்யலாம். வீட்டில், காரில் அல்லது பயணத்தின்போது கூட சார்ஜ் செய்ய வசதியாக இருக்கும்.
4. பாரம்பரிய கையடக்க மின் விசிறிகள் போலல்லாமல், ஹேண்ட் ஃபிரீ செயல்பாடு அளிக்கிறது. இவற்றை கழுத்தில் மாட்டிக்கொண்டே அன்றாட நடவடிக்கைகள் வேலைகளில் ஈடுபடலாம்.
5. இவை கழுத்து மற்றும் முகத்திற்கு நேரடி காற்றோட்டத்தை வழங்குகின்றன. இது வெப்பமான காலநிலை அல்லது நெரிசலான சூழல்களில் புத்துணர்ச்சியூட்டுவதாக, பயனுள்ளதாக இருக்கும்.
6. இது விலை மலிவானது மற்றும் செலவு குறைந்தது. ஏர்கண்டிஷனர் யூனிட்டுகள் அல்லது உயர்தர போர்ட்டபிள் ஃபேன்களுடன் ஒப்பிடும்போது கழுத்து விசிறிகளுக்கு மின்சார கட்டணம் தேவை இல்லை.
7. பல்வேறு பாணிகள் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் இது வருகிறது. பயணங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வசதிக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.
8. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஏசி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதைப் போல கழுத்து விசிறிகள் இல்லை. இவற்றின் குறைந்த ஆற்றல் நுகர்வு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்.
9. கோடை வெப்ப அலைகளுக்கு மத்தியில் வெப்ப நிலைகள் உயரும்போது நெக் ஃபேன்கள் அவற்றை தாங்குவதற்கு உபயோகப்படுகின்றன. காற்று சுழற்சி மோசமாக இருக்கும் நெரிசலான இடங்களில் ஒரு கழுத்து விசிறி வெப்பத்திலிருந்து ஓய்வு அளிக்கிறது. பொது போக்குவரத்து வெளிப்புற நிகழ்வுகள் அல்லது திருவிழாக்களில் பயன்படுத்த ஏற்றது.
கழுத்து ஏர் கண்டிஷனர்கள்:
இது கழுத்தில் அணியக்கூடிய போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் ஆகும். கழுத்து பேன்களில் இருந்து வேறுபட்டது. இவை குளிர்விக்க விசிறிகளை பயன்படுத்துவதில்லை. ஆனால். குளிரூட்டியை போன்ற ஒரு கூலிங் சிப் இதில் இருக்கிறது. கழுத்து விசிறிகளை விட சிறந்ததாக வேலை செய்கிறது.
இதன் குளிர்விக்கும் தன்மை கழுத்து பேன்களில் இருந்து மாறுபட்டது. பேன்களைப் போல அல்லாமல் குளிர்விக்கும் வரம்பை முகம் மற்றும் கழுத்து வரை விரிவுபடுத்துகிறது.
இவற்றை அணியும்போது கழுத்து வலி அல்லது பிற பிரச்னைகள் ஏற்படாது. எல்லா வசதியான அணியும் அளவிலும் கிடைக்கின்றன.
பல கழுத்து ஏர் கண்டிஷனர்கள் அமைதியாக செயல்படுகின்றன. அவை அலுவலகங்கள் அல்லது நூலகங்கள் போன்ற அமைதியான சூழலில் இடையூறுகளை ஏற்படுத்தாமல் பயன்படுத்துவதற்கு ஏற்றவை.