பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் - அக்டோபர், 11
பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!

ர்வதேச பெண் குழந்தைகள் தினம்  இன்று கொண்டாடப்படுகிறது.  2023ம் ஆண்டுக்கான கருப்பொருள், ‘பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் திறனை கட்டவிழ்த்து விடுதல்’ என்பதாகும். இது சிறுமிகளுக்கு அவர்களின் முழுத் திறனையும் உணர, வெளிப்படுத்தத் தேவையான சூழல், வாய்ப்புகள் மற்றும் ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நம் வீடுகளில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. முதலில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு இன்றி இரண்டு குழந்தைகளுக்கும் சமமான அன்பையும் உரிமையும் அளிக்க வேண்டும்.

2.  வீடுகளில் ஆண்களுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் தனிக் கவனம் எடுத்து பெண்கள் சமையல் செய்வர். ஆண்களுக்கு உடல் பலம் வேண்டும் என்று அந்தக் காலம் தொட்டு இன்று வரை அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு வகைகளில் விசேஷ அக்கறை செலுத்தும் பெண்கள், அதே அக்கறையை தமது பெண் குழந்தைகள் மீதும் காட்டுவதில்லை. ஆனால், உண்மையில் ஒரு பெண் குழந்தைக்குதான் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. சிறுமிகளுக்கு பூப்பெய்தும் காலம் முதல்  போதுமான ஊட்டச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.

3. பெண் குழந்தைகளுக்கான கல்வி விஷயத்தில் சில பெற்றோர் பாகுபாடு பார்க்கின்றனர். ஆண் குழந்தைக்கு நிறைய கட்டணம் கொடுத்து சிபிஎஸ்ஸி பள்ளியிலும் பெண் குழந்தைதானே என்று நினைப்பில் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் சேர்க்கிறார்கள். தான் விரும்பிய கல்வியைக் கற்க ஒரு ஆண் குழந்தையை வேறு மாநிலத்துக்கோ, வெளிநாட்டுக்கோ அனுப்பத் தயங்குவதில்லை. அதே சமயம், பெண் குழந்தை ஆசைப்பட்டால் அனுப்பத் தயங்குகிறார்கள். அப்படியில்லாமல், அவர்களுக்கும் கல்வியில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

4.  வீட்டில் பெண்களுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும். தினசரி சமையலில் தொடங்கி, பிள்ளைகளின் கல்வி, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்ற விஷயங்களில் ஒரு ஆண்தான் முடிவெடுக்கிறான். தான் விரும்பிய சமையல், அவளுக்குப் பிடித்த மாதிரியான டிசைனில் வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது என்று முழு அதிகாரத்தையும் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். பொருளாதார சுதந்திரமும் தர வேண்டும்.

5. தனது மனைவியும் இன்னொருவரின் பெண் குழந்தைதான் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்க வேண்டும். அவர்களது தனித் திறமையை போற்றி வளர்க்க வேண்டும். மகளோ, மனைவியோ அவர்களுக்கு விருப்பமான துறைகளில் பிரகாசிக்க தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது.

6. பெண் குழந்தைகளை வன்முறையில் இருந்து பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் முக்கியமான கடமை. தம் ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் பெண் குழந்தைகளை மதிப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அது நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். ‘உன் தங்கையை உனக்கு சமமாக நடத்து. நீ பார்க்கும் பெண்கள் எல்லாம் உனக்கு சகோதரிகள்’ என்ற எண்ணத்தை ஆழமாக சிறு வயதிலேயே நாம் விதைத்தால்தான் பெண் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகாமல் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com