வாழ்க்கையில் இந்த 2 தப்புகளை மட்டும் செஞ்சிடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!
வாழ்க்கையில் நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் தருணம் வரை பலவிதமான பாதைகளையும் பருவங்களையும் உறவுகளையும் தோழர்களையும் கடந்து செல்லவேண்டி இருக்கிறது. நம்முடைய இத்தகைய பள்ளம் மேடு நிறைந்த வாழ்நாளிலே, நாம் இரண்டு முக்கியமான தவறுகளை எப்போதுமே செய்யக்கூடாது. அந்த இரண்டு தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இப் பதிவில் பார்க்கலாம்.
முதலாவது தவறு:
Never lie to someone who trust you:
உங்கள் மீது நம்பிக்கையாகவும் நாணயமாகவும் இருப்பவர்களிடம் பொய் சொல்லக்கூடாது:
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மை முழுவதுமாக நம்பி நம்முடன் இருப்பது நம்முடைய பெற்றோர்கள்தான். அடுத்தபடியாக உண்மையான அதாவது ஆபத்திலும் கை கொடுக்கும் நண்பர்கள், அதற்கு பிறகுதான் நம்முடைய லைப் பார்ட்னர் மற்றும் குழந்தைகள். இவர்கள்தான் நம்மை முழுவதுமாக நம்புவார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அவர்களிடம் பொய் சொல்லலாமா? நாம் அவர்களிடம் கூறியது பொய் என்று தெரிய வரும்போது அவர்களின் மனம் என்ன பாடுபடும்? சுக்கு நூறாக உடைந்துவிடும். அதற்கான காரணத்தையோ அல்லது விளக்கத்தையோ அல்லது மன்னிப்பையோ நீங்கள் காலம் கடந்து ஆயிரம் முறை கூறினாலும் அவர்களின் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.
நம்மீது நம்பிக்கையோடு இருப்பவர்களிடம் எதற்காக பொய் கூற வேண்டும்?? ஒருவேளை அவர்களின் உடல் நலத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால், அந்த சமயத்தில் நாம் அவர்களிடம் உண்மையை மறைத்து பொய்யை கூறலாம். நாம் கூறக்கூடிய பொய்யால் நம்மை நம்புவர்களின் உயிர் காப்பாறறப் படும் என்கிற பட்சத்தில் மட்டுமே பொய் சொல்லாம்.
மற்றபடிக்கு காரணம் எதுவும் இல்லாமல் தேவை இல்லாமல் அவர்களிடம் பொய் சொல்லக்கூடாது. ஒரு சில பேர் நாம் கூறியது பொய் என்று தெரிந்து விடடாலும் நம்மிடம் காட்டிக்கொள்ளாமல் நம் மீது வைத்த நம்பிக்கையையும் அன்பையும் குறைக்க முடியாமல் மனதிற்குள்ளேயே குமிறி திணறிக்கொண்டிருப்பார்கள். ஆகவே தயவு செய்து நம்மை நம்புவர்களிடமும் நம்மிடம் உண்மையாக இருப்பவர்களிடமும் ஒருபோதும் பொய்யை கூறாதீர்கள்.
இரண்டாவது தவறு:
Never trust that someone lies to you:
உங்களிடம் பொய் கூறுபவர்களை ஒருபோது நம்பாதீர்கள்:
உங்கள் அலுவலகத்தில் இருப்பவர்களோ அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்களோ அல்லது தெரிந்தவர்களோ அல்லது நண்பர்களோ யாராக இருந்தாலும் இருக்கட்டும். அவர்கள் உங்களிடம் தேவை இல்லாமல் அடிக்கடி பொய் கூறினால் அவர்களை ஒருபோதும் எந்த விதத்திலும் நம்பாதீர்கள். அவர்கள் கூறிய பொய்யை மீண்டும் மீண்டும் நம்பும்போது தேவையில்லாத பிரச்னைகளை நீங்கள்தான் சந்திக்க வேண்டி இருக்கும்.
ஒருமுறை பொய் கூறினால் பரவாயில்லை. உங்களிடம் வந்து அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவர்களை மேற்கொண்டு நம்பவே கூடாது. அதற்காக அவர்களை முழுவதுமாக நான் நிராகரிக்க சொல்லவில்லை.
ஆனால் அவர்களின் மீது உங்களிருக்கும் நம்பிக்கையை நீக்கிவிடுங்கள். மேலும் அவர்களை நம்பி உங்களுடைய முக்கியமான விவரங்களையோ அல்லது confidential மேட்டர்களையோ கூறாதீர்கள். எந்த விதத்திலும் அவர்களை நம்பாமல் இருப்பதுதான் உங்களுக்கு உத்தமம்.

