Happy couple
Happy couplehttps://blog.cicloorganico.com

100 வயது வரை வாழ்வது ரொம்பவும் ஈசிதாங்க!

பொதுவாகவே, அனைவருக்கும் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றித்தான் தெரியாது. உலகின் 5 பகுதிகளில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக வாழ்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்கள், உணவில் அதிகளவில் நார்ச்சத்து கொண்ட தாவர உணவுகள் இடம் பெறுவதும், உடல் இயக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதும்தான் அவர்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இருக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

90 சதவிகித உணவுகள் தாவர வகைகளை சார்ந்த உணவாக எடுத்துக்கொள்வது, 10 சதவிகிதம் புரோட்டீன் நிறைந்த மீன், இறைச்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு 80 சதவீதம் நிரம்பும் வரை உணவை சாப்பிட்டால் போதும். இதனால் வயிற்றின் சுமை குறைந்து ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம்.

சாப்பிடும்போது வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் சாப்பிடுவது, மிகவும் மெதுவாக சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்பது மற்றும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நீண்ட ஆயுளைத் தரும்.

அதிகமாக வாழ விரும்புபவர்கள் கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்க முயற்சி செய்ய வேண்டும். வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ள அறையில் மிதமான குளிர்ச்சியில் தூங்க வேண்டும்.

மகிழ்ச்சிக்கான வழிகளில் ஒன்று குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது. நிகழ்காலத்தை முழுமையாக வாழ்ந்து, நீங்கள் விரும்புகின்ற மக்களோடு நேரம் செலவு செய்தால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
புத்திசாலித்தனமாக விவாதம் செய்வது எப்படி?
Happy couple

நல்ல நண்பர்கள், இனிமையாகப் பழகும் அண்டை வீட்டுக்காரர்கள், மகிழ்ச்சியான மனநிலை, போதுமான கையிருப்பு பணம் ஆகியவை உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அதோடு இவை உங்கள் ஆயுளையும் நீட்டிக்க உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மனம் விட்டு சிரித்து வாழ்கிறவர்களும். எப்போதும் புன்னகையுடன் இருப்பவர்களும் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த காலத்தில் நடந்த சோகங்களையும், பிரச்னைகளையும் மனதில் சுமந்து கொண்டு அவற்றோடு போராடாதீர்கள். எதை நினைத்தும் கவலைப்படாதீர்கள். எதிர்த்துப் போராடத் தயாராக இருந்தால் எதுவுமே சுலபம்தான். எந்தப் பிரச்னையிலும் தளர்ந்து விடாதீர்கள். கடினமான விஷயமெல்லாம் கூட சில மாதங்களுக்குப் பிறகு ஒன்றுமே இல்லாத விஷயமாகி விடும்.

அற்புதங்கள் நடக்கும் என்று நம்பிக்கை வையுங்கள். உங்களுடன் இறுதி வரை இருப்பது நீங்கள் மட்டுமே. அதனால் எந்த உறவுகளானாலும் வரும், போகும் என்பதை உணர்ந்து வாழுங்கள்.

எல்லா நேரங்களிலும் வாழ்க்கை சாதகமாக இருந்து விடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்காது இருங்கள். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் நூறு வயதென்ன அதற்கும் மேலாகவும் வாழலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com