மாமரம் புனிதமான தாவரங்களில் ஒன்றாகும். இறைவனுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள தனித்துவமான பண்புகளுக்காக மாவிலைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. மாவிலைகள் மகாலட்சுமி மற்றும் அன்பின் சின்னமாகும்.
மாவிலையின் சில இறை பயன்பாடுகள்:
1. ஓர் ‘பூர்ண கும்பத்தை’ முடிக்க, மங்கல சடங்குகள் மற்றும் பூஜையின்போது மாமரத்தின் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பூஜை அடிதளத்திற்காக ஒரு மண் பானை பராமரிக்கப்படுகிறது. இதில் பானை அன்னை பூமியையும், நீர் வாழ்வின் ஆதாரத்தையும்,, தேங்காய் தெய்வீக உணர்வையும், மா இலைகள் வாழ்க்கையையும் குறிக்கின்றன. ‘முழு பூர்ண கும்பம்’ மகாலட்சுமி மற்றும் செழிப்பைக் குறிக்கிறது.
2. சிவன் மற்றும் சக்தியின் மைந்தர்களாகிய விநாயகர் மற்றும் முருகன் ஆகிய கடவுள்களும் மாம்பழங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். மாம்பழங்கள் இருவருக்கும் பிடித்தமானவை. ஒரு கதையில் முருகப்பெருமான் கூறிய அறிவுரையில் ஒரு முறை கருவுறுதலையும், செல்வத்தையும் குறிக்கும் வகையில் மா இலைகளில் முடிச்சு போடுமாறு தன்னை பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிக் கூறினார்.
3. இந்திய வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் மா இலைகளின் சரம் கட்டப்படுகிறது. மாவிலைகள் மோசமான ஆன்மிக ஆற்றலைத் திசை திருப்பி, நேர்மறை கர்மாவை ஊக்குவிக்கின்றன.
4. ராமாயணம், மகாபாரதம் மற்றும் சில புராணங்கள் உட்பட பல இந்து நூல்களில் மாம்பழம் கருவுறுதல் சின்னமாக விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவை அன்பின் கடவுளான காமதேனுவுடன் தொடர்பு உடைவை.
5. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சமய நிகழ்வுகளுக்கும் மாவிலைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆக்ஸிஜனின் இலவசப் பாதையை ஊக்குவிக்கும் மற்றும் கூடுதல் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் ஆகியவற்றின் காரணமாக அவை அறிவியல்பூர்வமாக விளக்கப்படுகிறது.
மாவிலைகளின் நன்மைகள்:
முடியை பாதுகாக்க: மாவிலைகளில் வைட்டமின் 'சி' மற்றும் ‘ஏ’ நிரம்பி உள்ளதால் முடி பிரச்னைகளுக்கு தீர்வாகி ஒரு சிறந்த ஆரோக்கியமான முடியை தருகிறது. இரசாயனத்தால் சேதமடைந்த முடியை சரி செய்ய உதவுகிறது. அவை இயற்கையாக முடியை கறுப்பு நிறமாக்கும் ஃபிளாவனாய்டுகளைக் கொண்டுள்ளன.
சருமத்தை பாதுகாக்க: மாவிலைச்சாறு முகச் சுருக்கங்கள் மற்றும் வறட்சியை குறைக்கும் திறன் கொண்டது. ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவற்றில் உள்ளன. இது கொலாஜன் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மாவிலைகளில் அந்தோசயனின் உள்ளதால் சரும எரிச்சல் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது. பாக்டீரியா சரும நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த: உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்கிறது. இரத்த நாளங்களின் நிலையை வலுபடுத்தி மேம்படுத்துகின்றது. வீங்கி பருத்து வலிக்கின்ற நரம்புகளுக்கு சிகிச்சை அளிக்கிறது.
அமைதியின்மையை போக்குகிறது: மாவிலைகளை உட்கொள்வது மற்றும் மாவிலை தேநீர் அருந்துவது மன அமைதியின்மைக்கு சிறந்த சிகிச்சை ஆகும். மேலும், மாவிலையில் உள்ள அந்தோசயனின் எனப்படும் டானின்கள், வகை 1 நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும், வயிற்றுப்போக்கு, வயிற்று புண்கள், விக்கல்களை குணப்படுத்துகிறது மற்றும் பித்தப்பை கற்களுக்கு சிகிச்சை அளிக்கிறது. அழற்சி எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மாவிலைகளில் மருத்துவ குணங்கள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் அவற்றை உட்கொள்வது பாதுகாப்பானது. எனவே, வீட்டுக்கு ஒரு மா மரத்தை வளர்ப்பது மிகவும் நன்மையைத் தருகிறது.