பெரியவர்களான நமக்கே செல்போன் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவது கடினமாக இருக்கும்போது, குழந்தைகளின் உலகில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளை அரவணைக்கும்போதும், அவர்களுக்கு உணவூட்டும்போதும், அவர்களை உறங்க வைக்கும்போதும் தாய்மார்கள் தங்கள் கைபேசிகளில் மூழ்குவது ஒரு சர்வ சாதாரனமான விஷயமாக மாறிவிட்டது. இந்தச் செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை நம் அனைவரும் உணர வேண்டும்.
கைபேசிகளிலிருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, வளர்ந்த மனிதர்களின் உடலை விட, பச்சிளம் குழந்தைகளின் மென்மையான உடலை மிக எளிதாகவும், வேகமாகவும் பாதிக்கிறது. காரணம், குழந்தைகளின் மண்டை ஓடு மிகவும் மெல்லியது, அவர்களின் சருமம் மிருதுவானது. இந்தச் சூழலில், கைபேசியை அவர்களுக்கு மிக அருகில் வைத்துப் பயன்படுத்தும்போது, அதிலிருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்வீச்சு அவர்களின் மூளை, தசைகள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கிறது.
வளர்ச்சியில் ஏற்படும் தடைகள்!
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் இரண்டு ஆண்டுகள் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த பொன்னான நேரத்தில், அவர்களின் மூளை அபரிமிதமான வளர்ச்சியை எட்டுகிறது. கைபேசி கதிர்வீச்சுக்குத் தொடர்ந்து ஆளாகும்போது, இந்த இயல்பான வளர்ச்சி செயல்முறை தடைபட வாய்ப்புள்ளது.
இது அவர்களின் மூளை வளர்ச்சியை மந்தமாக்குவதுடன், நிம்மதியான உறக்கத்தையும் கெடுக்கிறது. உறக்கம் என்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. உறக்கமின்மை, அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி, அவர்களை எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாக்கும்.
புற்றுநோய் அபாயம்!
தொடர்ச்சியான கதிர்வீச்சுத் தாக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய இரண்டும் ஒன்று சேரும்போது, அது குழந்தையின் உடலில் பலவிதமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது புற்றுநோய் போன்ற கொடிய நாள்பட்ட நோய்கள் உருவாவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
மரபணு காரணிகளைத் தாண்டி, இதுபோன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் புற்றுநோயைத் தூண்டுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கைபேசியைப் பயன்படுத்துவது தவறல்ல, ஆனால் அதைப் பயன்படுத்தும் இடம் மற்றும் சூழல்தான் இங்கே முக்கியம்.
தொழில்நுட்பம் நமக்கு நண்பன்தான், ஆனால் அது நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எதிரியாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும்.