நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கும் இயற்கைக் கொசு விரட்டிகள்!

கொசு கடி
கொசு கடி
Published on

வெயில் காலம், மழைக்காலம் எதுவாக இருந்தாலும் அழையா விருந்தாளியாக வீட்டுக்கு முதலில் வருவது கொசுதான். இதன் தொல்லையை சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதே இல்லை. அதைவிட கொசு விரட்டிகளில் உள்ள கொடுமையான ரசாயனங்களால் ஏற்படும் சரும ஒவ்வாமை, சுவாசிப்பதில் சிரமம், கண் எரிச்சல் போன்றவை கொசுக் கடியை விட கொடூரமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருந்து நோய்கள் மற்றும் கொசுக்கள் வராமல் இருக்க சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம்.

எலுமிச்சை: எலுமிச்சம் பழம் மற்றும் கடுகு எண்ணெய் கொசுக்களை விரட்ட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் எலுமிச்சையை பாதியாக வெட்டி அதிலுள்ள சாறை வெளியே எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு எலுமிச்சை தோலுடன் கடுகு எண்ணெய் மற்றும் கிராம்பு, கற்பூரத்தை சேர்த்து எரிக்கவும். இதை வீட்டின் மூலையில் வைத்தால் கொசுக்களின் தொல்லை இருக்காது.

துளசி: மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, உடல் நலம் தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்துவது மட்டுமின்றி, கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. வீட்டில் கொசுக்கள் வராமல் இருக்க வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் துளசி இலைகளை வைக்கவும்.

காபி: காபி உங்களின் அன்றைய களைப்பைப் போக்க மட்டுமின்றி, வீட்டில் உள்ள கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. கொசுக்களுக்கு காபியின் வாசனையே பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காபி மருந்தை தயாரிக்க முதலில் ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் 1 டீஸ்பூன் காபி கலந்து ஸ்ப்ரே தயார் செய்யவும். அதன்பின், அதை வீடு முழுக்க ஸ்பிரே செய்தால் இது கொசுக்களை விரட்டிவிடும்.

பூண்டு: கொசுக்களை விரட்ட பூண்டும் ஒரு பயனுள்ள பொருளாகும். கொசுக்களைத் தடுக்க, 2 முதல் 4 பல் பூண்டுகளை நசுக்கி, 1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை ஆற வைத்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். இந்த பூண்டு தண்ணீரை மாலையில் வீடு முழுவதும் தெளிக்கவும். இதனால் கொசுக்கள் வீட்டை விட்டு முற்றிலும் வெளியேறும்.

இதையும் படியுங்கள்:
அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அன்றாட வைத்தியக் குறிப்புகள்!
கொசு கடி

கற்பூரம்: கொசுவை விரட்ட நம் வீட்டு பூஜை அறையில் உள்ள கற்பூரத்தையும் பயன்படுத்தலாம். கற்பூரத்தை எரிப்பதால் வீட்டில் அதிக புகை வராது. இந்த கற்பூரத்தில் இருந்து வெளிப்படும் புகை கொசுக்களை விரட்டிவிடும். மேலும், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு கற்பூரம் மிகவும் நன்மை பயக்கும்.

இவை எல்லாம் வேண்டாம் என்றால் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் கற்பூரத்தை வைத்து, நீங்கள் தூங்கும் அறையில் வைக்கவும். இந்த வாசனையிலிருந்து கொசுக்கள் ஓடிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com