சேர்ந்துவிடும் வெற்றிலையும் வாழைப்பழமும் – என்ன செய்யலாம்?

சேர்ந்துவிடும் வெற்றிலையும் வாழைப்பழமும் – என்ன செய்யலாம்?
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

- விஷி

1. வராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு பல வீடுகளில் வாங்கி வருவதால் வீட்டில் நிறைய இருக்கும். வீட்டில் சிலர்தான் வெற்றிலை பாக்கு போடுவார்கள். இதனால் நிறைய வெற்றிலை வீணாகும்

வெற்றிலையின் காம்பைக் கிள்ளி, சுண்ணாம்புத் தடவி பாக்கு. சிறிது தேங்காய்த் துருவல்,  சர்க்கரை, ஏலப் பொடி வைத்து மடித்து ஒரு கிராம்பைச் செருகி பீடாவாக மடித்துக் கொடுத்தால் விட்டில் எல்லோரும் ஸ்டைலாகப் போட்டுக் கொள்வார்கள். வசதிப்பட்டால் கிஸ்மிஸ், திராட்சை, முந்திரி, குல்கந்து. டூட்டி ப்ரூட்டி போன்றதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

2. வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுக்கும் வாழைப்பழம் வீட்டில் எக்கச்சக்கமாகச் சேர்ந்துவிடும். சற்று அதிகமாகக் கனிந்து வாழைப் பழம் இருந்தால் வீட்டில் எல்லோரும் எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்பார்கள். அதையே மிக்ஸியில் மோர், ஏலத்தூள், சர்க்கரை சேர்த்து லஸ்ஸி செய்து அருந்தலாம். அல்லது ஏதாவது பழ ஸ்குவாஷ்,  சிரப் அல்லது எசன்ஸ், சர்க்கரை சிட்சிக் ஆசிட் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்தும் அடித்து ஃப்ரூட் ஜூஸ் போன்று கொடுக்கலாம்.

வீட்டில் சாத்துக்குடி, ஆப்பிள், திராட்சை என்று வேறு எதாவது பழம் இருந்தால் அதையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது பாருங்கள் வீட்டில் இதைச் சாப்பிட போட்டா போட்டி நடப்பதை.

3. வராத்திரிக்கு ஒரு புதுவித கீர் தயாரிப்போமா? பாஸ்மதி அரிசியைக் களைந்து அதில் சில காரட் துண்டுகளைப் போட்டு பால் விட்டு குக்கரில் வேகவிடவும். இது ஆறியதும், முந்திரி அல்லது பாதாம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து சர்க்கரை, பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி ஏலப் பொடி சேர்க்கலாம்.

4. வராத்திரிக்குச் சிலர் வீடுகளில் ஒருநாள் புட்டு செய்வார்கள் பாகு வைத்து வெல்லப்புட்டு செய்வதுபோல தேங்காய்ச் சாதம், எலுமிச்சைச் சாதம் போன்றவற்றுக்குச் செய்வதுபோல தாளிதம் செய்து வெந்த புட்டைக் கலந்து இதையும் கொடுக்கலாம். சுண்டலுக்குப் பதிலாக மாறுதலாக இருக்கும்.

5. சில வீடுகளில் வடை செய்து ஒரு நாள் வெற்றிலை பாக்குக்குக் கொடுப்பார்கள். ஆமை வடையானால் ஊற வைத்த பருப்புகளை வடிகட்டியில் கொட்டி 5 நிமிடம் வைத்துவிட்டுப் பின்பு அரைத்தால் சுரசுரப்பாக இருக்கும். விருப்பமானால் அரைக்கும்போது. ஒரு துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். வாசனையாக இருப்பதோடு உடம்புக்கும் நல்லது. உளுந்து வடையானால் கழவைத்த உளுத்தம் பருப்பில் சிறிதளவு தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதியை அரைத்து எடுத்துத் தனியாக வைத்திருப்பதையும் கலந்து, தட்டினால் கரகரப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com