ஏசி, ஏர் கூலர் தேவையே இல்ல! வீடு சும்மா ஜில்லுனு இருக்கும்!

To keep the house cool
Cool house
Published on

கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க சில விஷயங்களை செய்தால் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற முடியும். இயற்கையான முறையில் வீட்டை குளிர்ச்சியாக்கும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

இயற்கையான முறையில் வீட்டை குளிச்சியாக்கும் சில டிப்ஸ்கள்:

  • வீட்டை நல்ல காற்றோட்டமாக வைத்துக் கொள்ளவும், காற்று எளிதில் வந்து செல்லவும், எதிரெதிர் திசையில் ஜன்னல்கள் வைப்பது சிறந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவதோடு காலை மற்றும் மாலை வேளைகளில் ஜன்னல்களை திறந்து வைத்தால் குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வந்து அறையின் வெப்ப நிலை குறைவாக இருக்கும்.

  • டேபிள் பேனுக்கு முன்பாக அதிகமாக குளிர்ந்த நிலையில் உள்ள ஐஸ் கட்டி உள்ள நீர் அடங்கிய கிண்ணத்தை வைக்க வேண்டும். பேனில் இருந்து வரும் காற்று இந்த நீரில் பட்டு, அறையை குளிர்ச்சியாக உணரவைக்கும்.

  • ஜன்னல் ஓரங்களில் அழகுக்காக மட்டுமன்றி, வெப்பத்தின் தீவிரத்தை குறைக்கவும் செடிகளை வளர்க்கலாம். கொடி போன்ற வளரும் தாவரங்களை ஜன்னல் கம்பிகளில் பரவ விட்டால் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமன்றி காற்றில் உள்ள வெப்பத்தை உறிந்து வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும்.

  • மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் வெயிலின் நேரடி தாக்கத்தை செடிகள் பெற்றுக் கொள்வதால் வெயிலின் தாக்கம் வீட்டிற்குள் பெருமளவு குறையும். மாடிகளில் மாதுளை போன்ற சிறிய இட வசதியில் வளரக்கூடிய பழச்செடிகளையும் வளர்ப்பது இரவில் வீட்டிற்குள் கடுமையான உஷ்ணத்தை குறைக்கும் வழிமுறையாகும்.

  • மூங்கிலுக்கு வெப்பத்தை தடுக்கும் சக்தி உள்ளது. இதனால் வீட்டு கதவு மற்றும் ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்களை தொங்க விட்டால் அறைவெப்பம் உள்ளே நுழையாதபடி அவை தடுத்துவிடும். இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பது போல வீட்டிற்குள் குளிர்ச்சியையும் கொடுக்கும்.

  • வீட்டின் கூரை வழியாக வெப்பம் வீட்டிற்குள் இறங்குவதை தடுக்க சிறந்த வழிகளில் ஒன்றாக வீட்டின் வெளிப்புற மேல் தளத்தில் ஒயிட் வாஷ் செய்வது. வெள்ளை நிறம் ஒளியை பெருமளவு பிரதிபலிக்கும் என்பதால் வெப்பம் வீட்டிற்குள் இறங்குவது கொஞ்சம் தடுக்கப்படும்.

  • வீட்டின் ஜன்னலை ஒட்டி திரைச்சீலைகள் பயன்படுத்தும் போது வெயில் நேரடியாக அறைக்குள் விழுவது தடுக்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் ஓரளவுகுறையும்.

  • வெப்பத்தை தக்க வைக்க கூடிய புத்தகங்கள், பேப்பர்கள், பர்னிச்சர்கள், எலக்ட்ரிக் பொருட்கள் இவற்றை சுத்தப்படுத்தி ஜன்னலை திறந்து வைத்தால் வெப்ப நிலை குறைந்து வீட்டிற்குள் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

மேற்கூறிய விஷயங்களை செய்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பதில் ஐயமே இல்லை.

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் ஏ.சி. பில் குறையணுமா? இந்த 10 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
To keep the house cool

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com