Noodles Vs Spaghetti, வித்தியாசம் தெரியுமா?

Noodles Vs Spaghetti
Noodles Vs Spaghetti

மையல் உலகில் பாஸ்தாவின் பலதரப்பட்ட வகைகள் நமது சுவை அரும்புகளை துள்ளி குதிக்கச் செய்வதில் தவறில்லை என்று தான் சொல்ல வேண்டும். மக்களுடைய விருப்பங்களின் அடிப்படையில் நூடுல்ஸ் மற்றும் ஸ்பெகட்டி போன்றவை முன்னிலையில் நிற்கின்றன. அவை பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருந்தாலும், அவற்றின் சுவைகள், அமைப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் பெரிதும் வித்தியாசப்படுகின்றன. 

உலக மக்களைக் கவர்ந்த நூடுல்ஸ்: நூடுல்ஸ் என்றால் உலகிலுள்ள எல்லா தரப்பு மக்களுக்கும் தெரியும். அந்த அளவுக்கு பிரபலத்தன்மை வாய்ந்தது எனலாம். பல பகுதிகளில் அதன் கலாச்சாரத்தோடு நூடுல்ஸ் பின்னிப் பிணைந்துள்ளது. இவை பெரும்பாலும் கோதுமை, அரிசி அல்லது மரகோதுமை மாவு ஆகியவற்றால் செய்யப்படுகிறது. இப்படி ஒவ்வொரு பொருளில் செய்யப்படும் நூடுல்ஸ் அதன் தனித்துவமான சுவையை வழங்குகிறது. குறிப்பாக ஆசிய உணவு வகைகளில், சேமியா முதல் உடோன் என்ற உணவு வகை வரை நூடுல்ஸ் அடிப்படையிலேயே வருகிறது. அவற்றின் நெகழ்வான தன்மை, நூடுல்ஸ் சமைக்கும்போது பயன்படுத்தும் பிளேவர்கள் மற்றும் சாஸ்களை உறிஞ்சுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. பல ஆசிய கலாச்சாரங்களில் நூடுல்ஸ் சாப்பிடும்போது உருவாகும் சத்தம் மகிழ்ச்சியின் சான்றாகப் பார்க்கப்படுகிறது. 

இத்தாலியின் ஸ்பெகட்டி: 

த்தாலியின் மையப்பகுதியில் இருந்துதான் உலகம் முழுவதும் பிரபலமான ஸ்பெகட்டி வந்தது. துரம் கோதுமை ரவையிலிருந்து உருவாக்கப்படும் ஸ்பெகட்டி, அதன் தனித்துவமான உறுதித்தன்மைக்குப் பெயர் பெற்றது. இதன் மெல்லிய நீளமான இழைகள் உணவு விரும்பிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், இதில் பயன்படுத்தப்படும் சாஸில் நன்றாக ஒட்டிக்கொண்டு சுவையைக் கூட்டுகிறது. 

Noodles Vs Spaghetti வேறுபாடு: 

வை இரண்டுக்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசங்களில் ஒன்று அவற்றின் அமைப்புகள்தான். நூடுல்ஸ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் எண்ணற்ற மாவுகள் மற்றும் தயாரிப்புகளின் அடிப்படையில் இதன் அம்சம் மாறுபட்டதாக இருக்கும். எனவே ஸ்பெகட்டி போல இது உறுதியாக இருக்காது. இதற்கு அப்படியே எதிராக ஸ்பெகட்டி ஒரு நிலையான உறுதியைக் கொண்டுள்ளது. எவ்வளவு நேரம் சாஸ் அல்லது சூப்களில் ஊறவைக்கப் பட்டாலும், அதன் உறுதித்தன்மை எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கும். இதுவே நூடுல்ஸை நீண்ட நேரம் சூப்பில் ஊற வைத்தாலோ அல்லது அதிகமாக சமைத்தாலோ அதன் தன்மை முற்றிலுமாக மாறிவிடும். 

இவை இரண்டுமே தனித்தனி சுவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் கலாச்சாரங்களோடும் ஒன்றிப் பயணிக்கிறது. பொதுவாகவே நூடுல்ஸ் சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் கலாச்சார உணவாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஸ்பெகட்டி இத்தாலியின் தனி அடையாளமாக இருக்கிறது. 

இந்த இரண்டு உணவுகளுமே நாடு கடந்து நம்மிடம் வந்திருக்கிறது எனலாம். ஒருவேளை நீங்கள் நூடுல்ஸை ருசித்து உண்பவராக இருந்தாலும் சரி, அல்லது ஒரு ஃபோர்க்கை கையில் பிடித்து ஸ்பெகட்டியை அதில் சுழற்றி வாயில் திணிப்பவராக இருந்தாலும் சரி, பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றின் சுவை மற்றும் கலாச்சாரத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வெவ்வேறு உணவுகளை நீங்கள் ருசிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com