குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் பெற்றோரா நீங்க? ப்ளீஸ், இந்த செட்டிங்ஸ் மாத்தி கொடுங்க! 

Parent who gives your kids cell phones.
Parent who gives your kids cell phones.

இப்போதெல்லாம் எல்லா வயதினருக்குமே செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக குழந்தைகள் பள்ளி முடித்து வீடு திரும்பிய உடனேயே, தங்களது நேரத்தை எலக்ட்ரானிக் கேஜெட்டுகளில் செலவழிக்கின்றனர். வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவதெல்லாம் 90ஸ் கிட்ஸ் காலத்துடன் முடிந்துவிட்டது. இப்போது இருக்கும் குழந்தைகள் கையில் எப்போதும் செல்போன் மட்டுமே இருப்பதால், அவர்களின் கண்களும் உடல் நலமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. 

குழந்தைகள் பயன்படுத்தும் கெஜட்டுகளில் இணைய வசதி இருப்பதால், அவர்கள் தவறான விஷயங்களை அணுகுவது மிகவும் எளிதாகிவிட்டது. இதனால் குழந்தைகள் தவறான பாதிக்கு சென்றுவிடும் வாய்ப்பிருப்பதால், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்போது இருக்கும் குழந்தைகளின் பிடிவாத குணத்தால் பெற்றோர்களும் அவர்களுக்கு அடி பணிந்து, எலக்ட்ரானிக் கேஜெட்டுகளை பயன்படுத்த விடுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க, எதுபோன்ற விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என இப்பதிவில் பார்க்கலாம். 

இப்போது இருக்கும் குழந்தைகள் அதிகமாக youtube மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களையே பயன்படுத்துகின்றனர். அதில் மோசமான உள்ளடக்கங்கள் வருவதால், குழந்தைகள் அவற்றைப் பார்த்து கெட்டுப் போகாமல் இருக்க, எல்லாம் சமூக ஊடக தளங்களிலும், parental control அம்சம் கொடுக்கப்படுகிறது. இதை ஆன் செய்துவிட்டு உங்கள் குழந்தைகளிடம் ஸ்மார்ட் ஃபோனைக் கொடுத்தால், அவர்கள் தவறான விஷயங்களை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கலாம்.

அதேபோல ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோரில், உங்கள் குழந்தைகள் எதுபோன்ற ஆப்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வயது கட்டுப்பாடுகளை இயக்குவது நல்லது. இந்த அம்சம் மூலமாக அவர்கள் வயதுக்கு பொருந்தாத கேம்கள், பயன்பாடுகள் போன்றவை பதிவிறக்கம் செய்வது தடுக்கப்படும். சமூக வலைதளங்களைப் போலவே கூகுள் பிளே ஸ்டோரிலும் பேரண்டல் கண்ட்ரோல் செட்டிங் உள்ளது. அதை ஒவ்வொரு பெற்றோரும் தவறாமல் இயக்கி விடுங்கள். 

இதையும் படியுங்கள்:
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய 10 விஷயம்!
Parent who gives your kids cell phones.

குழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் இணையத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். இணையத்தில் நடக்கும் மோசடிகள், வைரஸ் குற்றங்கள் ஆன்லைன் கட்டணங்கள் தொடர்பான எல்லா விவரங்களையும் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துவது நல்லது. இதன் மூலமாக குழந்தைகள் அவர்களுக்கே தெரியாமல் மோசடியில் சிக்கிக் கொள்வது தவிர்க்கப்படும். 

உங்களது சொந்த மின்னஞ்சல் முகவரியை உங்கள் குழந்தைகளைப் பயன்படுத்த விடாதீர்கள். அவர்களுக்கென தனி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவர்களின் பயன்பாடுகளை அனுமதிப்பது நல்லது. இதன் மூலமாக அவர்களுக்கு தவறான விளம்பரங்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம். மேலும் குழந்தைகளின் இணைய செயல்பாட்டை எளிதாகக் கண்காணிக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com