பதி பக்தி!

குட்டிக் கதை
பதி பக்தி!

படித்ததில் பிடித்தது

ஓவியம்: பிள்ளை

பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும்போது முதலைகள் தாக்கி இறந்துபோனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகு நேரம் அந்தக் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்தத் தொடங்கினான். முதலைகள் அவனை விரட்டத் தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்துவிட்டான். அந்தப் பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்துவிட்டான். வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். இப்படி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கும்போது திடீர்னு தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா? மனைவி அமைதியாக சொன்னாள். அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com