மக்களே மழையை பாதுகாப்பா வெல்லலாம் வாங்க.....!

rain
Rain...
Published on

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிச்சாச்சு... நமக்கே தெரியும் நவம்பர், டிசம்பர் நெருங்கினாலே மழையையும் சாதிக்கணும்னு.. ஆமாங்க, ரெட் அலெர்ட் வேற.. சென்னை மக்களுக்கு போட் ஷோதான்... ‘இந்த   பக்கம் பார்த்தா ஜோனு மழை, அந்த பக்கம் பார்த்தா ஜோனு மழை’ தான் சென்னை வாசிகளோட டயலாக்கா இருக்கு... கவலை படாதீங்க மக்களே, இந்த கொட்டி தீர்க்கும் மழையை பாதுகாப்பா எப்படி வெல்லலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்......

மழைகாலங்களில் பாதுகாப்பாக இருக்க,

  • மழை காலங்களில் இடி, மின்னல் அதிகம் இருக்கும் என்பதால், இடியின் சப்தம் கேட்டாலே வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்திலேயே இருப்பது நல்லது. முக்கியமாக மரத்தின் அடி, மின்கம்பங்கள் அருகில் நிற்பதை தவிர்த்து விடுங்கள்.

  • அனைத்து ஜன்னல்கள், கதவுகளை மூடி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளியே அல்லது பால்கனியில் வைத்திருக்கும் பொருட்களை வீட்டினுள் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • அந்தந்த மாவட்டங்களில் மழை தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்க. எச்சரிக்கைகளை அறிந்து அதன்படி செயல்படுங்கள்.

இதையும் படியுங்கள்:
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
rain
  • முடிந்தளவு வீட்டில் அல்லது அலுவலகம் என எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கேயே மழை நிற்கும் வரை இருங்கள். வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து விடுவது நல்லது.

  • உங்கள் குழந்தைகள், வளர்ப்பு உயிரினங்கள் வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

  • முக்கியமான எலக்ட்ரிக் சாதனங்களை துண்டித்துவிடுங்கள். மின்னல், புயலின்போது மெயின் பவர் சப்ளையில் ஏற்படும் பாதிப்புகள் எலக்ட்ரிக் சாதனங்களை பழுதாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

  • மழைக்காலத்தில் மின்கம்பம் இருக்கும் இடங்களுக்கு செல்லாதீர்கள். ஈரமான இடத்தில் மின் பொத்தானை அழுத்தவோ அல்லது தொடவோ கூடாது. கால்நடைகளையும் மின்கம்பத்தின் அருகிலோ மின்கம்பத்திலோ கட்டக் கூடாது.  

  • மழை நேரங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரில், கால்வைப்பதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், உலோக பைப்கள் வழியாகவும் மின்சாரம் பாய வாய்ப்புள்ளதால், ஓடும் தண்ணீரில் இருந்து விலகிதான் இருக்க வேண்டும்.

  • காய்ச்சல், தடுமம் போன்றவற்றிக்கு முன்னெச்சரிக்கையாக மாத்திரைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

  • அவசர உதவி எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

  • தேவையான காய்கறிகள், பழங்கள் என அனைத்தையும் முன்பே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

  • மழை நேரங்களில் சின்னசின்ன விஷயங்களில் கூட கவனமாக இருப்பது மிக முக்கியம். அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கையாக இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com