
ஒரு தத்துவ ஞானி பென்சில் கற்றுத் தரும் ஐந்து பாடங்களை பற்றி சொல்கிறார். பென்சில் நம் இதயங்களில் வெற்றி விதை விதைத்து நம் வளர்ச்சிக்கு எப்படி உதவுகிறது என்று விளக்குகிறார்.
1. பென்சிலினுடைய தரத்தை நிர்ணயிப்பது அதன் வெளிப்புறத்தின் நிறம் அல்லது பளபளப்பல்ல; உட்புறத்தில் உள்ள கிராபைட் டின் தரம் தான். அதேபோல் நம் தரத்தையும் நிர்ணயிப்பது புற அழகு அல்ல. அக அழகான அறிவு , அன்பு, ஆற்றல், கருணை இவைகள் தான்.
2.பென்சிலால் எழுதும்போது தவறாக எழுதியதை அழிக்கலாம். நாமும் நம் பிழைகளை திருத்திக் கொள்வதன் மூலம் குற்ற உணர்வுடன் உழலாமல் திருந்தி நல்லவர்களாக வாழலாம்.
3.பென்சிலை அவ்வப்போது கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் நம் மனத்தையும் அடிக்கடி செம்மைப்படுத்த வேண்டும். பென்சிலைச் சீவுவதனால் அதற்கு வலி ஏற்படுவதைப் போலவே நமக்கும் சில சமயம் வலி, வேதனைகள் உண்டாகலாம். ஆனாலும் ஊராக்கிய பென்சிலினால் அழகான எழுத்துக்கள் கிடைப்பதைப் போலவே பக்குவப்பட்ட நம் மனமும் சிறந்த பலன்களை அளிக்கும்.
4.பென்சிலினால் எழுதிய வெற்றுத் தாள் பொருள் பொதிந்த தகவல் பெட்டகம் ஆகிறது;. அதேபோல் நாமும் நம் திறமையினால் மதிப்பில்லாத பொருளை மதிப்புள்ளதாக்கலாம்.
5.பென்சில் எத்தனை மகத்தான காவியம் படைத்தாலும் தான் என தனியாக இயங்க முடியாது; தன்னைவிட ஆற்றல் உள்ளவரை இயங்க அனுமதிக்க வேண்டும். நாமும் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் வழிகாட்டுதல் பெற்றால் முன்னேறலாம்.
நம் உள்ளீட்டை உணர்ந்து, தவறுகளைத் திருத்தி, நம்மைச் செலுத்திக் கொண்டு பிறர் மதிப்பை உணர்ந்து, அறிவில் சிறந்தவர்களுடைய வழிகாட்டுதலோடு வாழ வேண்டும் என்பதே பென்சில் உணர்த்தும் அற்புதம்.